Kathir News
Begin typing your search above and press return to search.

8 மாதம் ஆட்சியில் இருந்துட்டு இன்னும் அ.தி.மு.க.வை குறை கூறுவதா: ஸ்டாலினுக்கு பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்!

புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்தார். இதில் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

8 மாதம் ஆட்சியில் இருந்துட்டு இன்னும் அ.தி.மு.க.வை குறை கூறுவதா: ஸ்டாலினுக்கு பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்!
X

ThangaveluBy : Thangavelu

  |  2 Jan 2022 11:39 AM IST

புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்தார். இதில் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் எங்கள் கட்சி தனித்து போட்டியிடும். அதற்கான அறிவிப்புகளை ஏற்கனவே வெளியிட்டுள்ளோம். தமிழகத்தில் தற்போது நடைபெறும் சீர்கேடுகளுக்கு திமுகதான் பொறுப்பு. மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கு மேலாகிவிட்டது. இன்னும் அதிமுகவை குறைகூறுவது சரியில்லை.

மேலும், சென்னை, திருவொற்றியூரில் கட்டட விபத்து ஏற்பட்டது. அதனை முதலமைச்சராக சென்று பார்வையிடாமல் கட்சிக்கு ஆட்களை சேர்த்துக்கொண்டிருக்கிறார். இது மிகப்பெரிய தவறான முன்னுதாரணமாகும். முதலமைச்சராக இருந்து கொண்டு இது போன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டனத்துக்குரியது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source: News 18 Tamilnadu

Image Courtesy: Facebook

Next Story
கதிர் தொகுப்பு
Trending News