Kathir News
Begin typing your search above and press return to search.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து.!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து.!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 Dec 2020 11:39 AM GMT

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார். கடந்த 1964ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி பிறந்தார் சோனியா காந்தி, இன்று 74வது பிறந்த நாள் கொண்டாடுகிறார். ஆனால் விவசாய போராட்டம் காரணமாக தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று தொண்டர்களுக்கு அறிவுரை கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நல்ல ஆரோக்கியத்துடன் வாழ கடவுள் அவரை ஆசிர்வதிப்பாராக என்று வாழ்த்து கூறியுள்ளார். மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் வாழ்த்து கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News