Begin typing your search above and press return to search.
துணை முதல்வரின் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்துச்செய்தி.!
துணை முதல்வரின் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்துச்செய்தி.!
By : Kathir Webdesk
தமிழர் திருநாளான இன்று பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய தினத்தில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்துசெய்தி அனுப்பியுள்ளார்.
அவர் அனுப்பியுள்ள வாழ்த்து கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: உங்களுக்கு என் இதய பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகள். இந்த நன்னாளின் மங்களமும், மகிழ்ச்சியும் வரும் ஆண்டுகளில் தினமும் வெளிப்படட்டும். இந்த நன்னாள், அமைதிக்கும், உடல் நலத்துக்கும், மகிழ்ச்சிக்கும் கட்டியம் கூறட்டும்.
உங்களின் வளமான பல்வேறு அனுபவங்கள் தொடர்ந்து இத்திருநாட்டின் உயர்வுக்கு உதவட்டும்.
இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Next Story