Kathir News
Begin typing your search above and press return to search.

ட்விட்டரில் அதிகம் பேர் பின்பற்றும் அரசுத் தலைவரானார் பிரதமர் மோடி!

ட்விட்டரில் அதிகம் பேர் பின்பற்றும் அரசுத் தலைவரானார் பிரதமர் மோடி!

ட்விட்டரில் அதிகம் பேர் பின்பற்றும் அரசுத் தலைவரானார் பிரதமர் மோடி!
X

Saffron MomBy : Saffron Mom

  |  10 Jan 2021 10:55 PM IST

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டதைடுத்து, உலகில் அதிகமாக ட்விட்டரில் பின் தொடரப் படும் அரசுத் தலைவராக இந்திய பிரதமர் மோடி முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

கடந்த நவம்பர் 2020 இல் நடந்த அமெரிக்க தேர்தலில் குடியரசுக் கட்சி தோல்வி அடைந்,து ஜனநாயக கட்சி வெற்றி பெற்று அதன் வேட்பாளர் ஜோ பிடன் ஜனவரி 20ஆம் தேதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் அமெரிக்க அதிபராக பதவி ஏற்க இருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பு டிரம்ப் ஆதரவாளர்கள் கேப்பிடல் ஹில்லில் நடத்திய கலவரத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து அதிபர் டிரம்ப்பின் ட்விட்டர், ஃபேஸ்புக், ஸ்னாப்ஷாட், இன்ஸ்டாகிராம், பின்ட்ரஸ்ட் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவரது கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டது.

8.87 கோடி பேர் ட்ரம்பை பின்பற்றி வந்தனர். தற்பொழுது 6.47 கோடி பின்தொடர்பவர்கள் உள்ள நமது பிரதமர் மோடி, உலக அளவில் அதிகம் பின்பற்றப்படும் அரசு தலைவராக உள்ளார்.

12.7 கோடி பின்தொடர்பவர்கள் உடன் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா அதிகம்பேர் தொடரும் அரசியல் தலைவராக நீடிக்கிறார்.

With Inputs From: Polimer News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News