பிரதமர் மோடிதான் எங்கள் குலசாமி: தேவேந்திர குல வேளாளர் இளைஞர் நல சங்க கூட்டமைப்பு.!
பிரதமர் மோடிதான் எங்கள் குலசாமி: தேவேந்திர குல வேளாளர் இளைஞர் நல சங்க கூட்டமைப்பு.!
By : Kathir Webdesk
பிரதமர் மோடியை எங்கள் குலசாமியாக தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள் வணங்குவார்கள் என்று இளைஞர் நல சங்க கூட்டமைப்பு நிறுவனர் மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
நேற்று சென்னை வந்திருந்த பிரதமர் மோடி தேவேந்திர குல வேளாளர் குறித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்த அறிவிப்புக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தேவேந்திர குல வேளாளர் இளைஞர் நல சங்க கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.
இது பற்றி தேவேந்திர குல வோளர்கள் இளைஞர் நல சங்க கூட்டமைப்பு நிறுவனர் தாஸ் பாண்டியன் பேசும்போது, தொழில், கலாசாரம், ஜாதி கட்டமைப்பு ரீதியாக, தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் முன்னேற்றம் அடைந்து விடும்.
இதற்கு அடித்தளமிட்ட பிரதமர் மோடியை, எங்கள் குலசாமியாக தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள் வணங்குவர். எங்களுக்கு 110 தொகுதிகளில வாக்கு வங்கி உள்ளது. எனவே வரும் தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணிக்கே எங்கள் சமூகத்தினர் வாக்குகளை அளிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.