வாரிசு அரசியலை பா.ஜ.க. வேரறுக்கும்: பிரதமர் மோடி பேச்சு!
By : Thangavelu
ஒவ்வொரு மாநிலத்திலும் வாரிசு அரசியலை எதிர்த்து பாஜக போராடும் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
இன்று பாஜகவின் 41வது ஆண்டு நிறுவன தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலமாக உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, பாஜக மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. ஒரே தேசம் என்கின்ற அடிப்படையில் பணியாற்றி வருகிறோம். நாடு மாற்றம் கண்டது மட்டுமின்றி தொடர்ந்து வளர்ச்சியை நோக்கி செல்கிறது. உலகத்திலேயே 180 கோடி தடுப்பூசி போட்ட ஒரே நாடு நமது இந்தியா மட்டும்தான்.
மேலும், பாஜக 4 மாநிலங்களில் பெற்ற வெற்றியை பெண்கள் கொண்டாடி வருகின்றனர். புதிய அதிகாரம், சுகாதார வசதிகள், ரேசன் கார்டு உள்ளிட்ட அதிகாரங்களை வழங்கியுள்ளது. மேலும், வாரிசு அரசியல் லாபம் பெற வேண்டும் என்பதற்காக சில கட்சிகள் செயல்பட்டு வருகிறது. எனவே வாரிசு அரசியலை பாஜக வேரறுக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Source, Image Courtesy: Dinamalar