குறுக்கு வழியில் அரசியல் செய்வது நாட்டை அழித்துவிடும் - ஜார்கண்டில் யாரை குறிப்பிட்டார் பிரதமர் மோடி
By : Thangavelu
குறுக்கு வழியில் ஓட்டு வாங்குவது என்பது எளிதானது. ஆனால் அது போன்ற குறுக்கு வழி அரசியல் நாட்டை அழித்து விடும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டப்பணிகளை துவக்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று சென்றிருந்தார். அதனை முடித்துக்கொண்ட அவர் தியோகார் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியதாவது: குறுக்கு வழியில் அரசியல் செய்வது நாட்டை அழித்துவிடும். இந்தியாவை பொறுத்தவரையில் பல குறுக்கு வழிகள் இருக்கிறது. இந்த குறுக்கு வழி அரசியலில் தள்ளி நிற்க வேண்டும். தற்போதைய சூழலில் இது போன்ற அரசியல் மிகப்பெரிய சவாலாக மாறிவிட்டது.
இது போன்று குறுக்கு வழி அரசியல் மூலம் ஓட்டுக்களை பெற முடியும். அதாவது குறுக்கு வழியில் அரசியல் செய்பவர்களால் எப்போதுமே விமான நிலையங்கள் அமைத்தது கிடையாது. நவீன முறையில் நெடுஞ்சாலைகள் அமைத்தது கிடையாது. எய்ம்ஸ் மருத்துவமனையும் அமைத்தது கிடையாது. மேலும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மருத்துவ கல்லூரிகள் துவங்குவதற்கு நடவடிக்கை எடுத்ததும் கிடையாது.
நாம் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறமோ அந்த பணிகளை துவக்கி வைப்பதற்கான நிர்வாக மாதிரியையும், அரசியல் கலாசாரம் மற்றும் வேலை கலாசாரத்தை பா.ஜ.க., அரசு கொண்டு வந்திருக்கிறது. தற்போது தியோகரில் விமான நிலையம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்ட வந்தேன். இன்று அதனை துவக்கி வைத்துள்ளேன். ஆனால் முன்பு எல்லாம் திட்டங்கள் அறிவிக்கப்படும் நிலையில் அரசுகள் மாறிய பின்னரும் எந்த ஒரு பணியும் நடைபெறாது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
Source, Image Courtesy: Dinamalar