தமிழகத்தில் வேட்பாளராக களமிறங்கும் பிரதமர் மோடி - எதிர்கட்சிகளை அலறவிடும் பா.ஜ.க'வின் மாஸ்டர் பிளான்!
தமிழகத்தில் பிரதமர் மோடி போட்டியிடுவது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முக்கிய தகவல் கூறியுள்ளார்.

தமிழகத்தில் பிரதமர் மோடி போட்டியிடுவது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முக்கிய தகவல் கூறியுள்ளார்.
வரும் 2024 ஆம் ஆண்டு நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது, தமிழக பாஜக முழு அளவில் தற்போது அதன் வேலைகளை துவங்கி விட்டது. இப்பொழுது டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தேசிய செயற்குழு கூட்டத்தை கூட்டியுள்ளார், அனைத்து மாநில தலைவர்கள் மட்டுமின்றி முக்கிய தலைவர்கள் அந்த கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
இந்திய அளவில் முழு வீச்சில் பாஜக 2024 தேர்தலுக்கு தயாராவது, எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தை முறியடிப்பது, கள அளவிலான வாக்குகளை கவருவது போன்ற பல பல திட்டங்கள் விரைந்து தீட்டப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பிரதமர் மோடி போட்டியிடுவது குறித்து தனியா சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, 'தமிழகத்தில் பிரதமர் மோடி போட்டியிட வேண்டும் என்பது தமிழக மக்களின் விருப்பம். காசி இராமேஸ்வரம் என இரண்டு நகருக்கும் ஆன்மீக தொடர்பு உள்ளது, கலாச்சார தொடர்பும் உள்ளது.
இப்படி இருக்கையில் ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி போட்டியிடுவது குறித்து அனைவரும் விருப்பமாக கூறப்பட்டு இருக்கிறது, இருந்தாலும் பிரதமர் தங்கள் மாநிலத்தில் போட்டியிட வேண்டுமென அந்தந்த மாநில தலைவர்கள் தங்களது விருப்பங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நான் குறிப்பாக தென் மாவட்டங்களை சுற்றுபயணம் முடித்துக்கொண்டு வரும்பொழுது மக்கள் என்னிடம் பிரதமர் தமிழகத்தில் போட்டியிடுவது குறித்து ஆர்வமாக கேட்கின்றனர்.
நான் ஒரு கடையில் சாப்பிடும் போது கூட பிரதமர் மோடி எங்கள் பக்கத்து தொகுதியில் இங்கு போட்டியிடுகிறாரா என ஆர்வமாக ஒரு தொண்டர் என்னிடம் கேட்டார். எனவே இது குறித்து அதிகாரப்பூர் அறிவிப்பு மற்றும் முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை. இன்றைய சூழலில் தமிழகத்தில் குறிப்பாக தென் மாநிலங்களில், குறிப்பாக தமிழகத்தில் பாஜக கணிசமான எம்.பி எண்ணிக்கை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது.
வரும் 2024 தேர்தலில் 400 எண்ணிக்கையில் எம்.பி'க்களை பெற வேண்டும் என்பது பாஜகவில் விருப்பம். இந்த நிலையில் தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் பிரதமர் மோடி போட்டியிட்டால் எதிர்பார்ப்பும் அதிகமாகும், அதே சமயத்தில் மக்களின் பா.ஜ.க ஆதரவு வாக்குகள் கணிசமாக ஒருங்கிணைக்கப்படும்! எனவே தமிழகம், கேரளம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் கிடைக்கும் எம்.பி'க்களின் எண்ணிக்கையை பா.ஜ.க 400 என்ற அளவை தொடும் எனவே இதுகுறித்து மேல் மட்டம் கண்டிப்பாக முடிவு எடுக்கும் என தெரிகிறது.
பாஜக தேசிய தலைமை முடிவெடுக்கும் பட்சத்தில் தமிழகத்தில் பிரதமர் போட்டியிடுவார்! அவ்வாறு போட்டியிடும் பட்சத்தில் அந்த தொகுதியை பா.ஜ.க முழு அளவில் வேலை செய்து தமிழகத்தின் எம்.பி மோடி என பெருமையுடன் கூறும் அளவிற்கு தமிழக மக்களுக்கு பெருமையும், தமிழகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற பிரதமர் மோடியின் நீண்ட நாள் ஆசை பூர்த்தி செய்யவும் வழிவகை கிடைக்கும் என நம்பப்படுகிறது.
இவ்வாறு இருக்கும் தமிழகத்தில் மோடி போட்டியிடதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம், அவ்வாறு நடந்தால் தமிழகத்தில் தாமரை மலர்வது மட்டுமின்றி, தமிழகத்தில் தாமரை அசைக்க முடியாத சக்தியாக உருவெடுக்கும்.