Kathir News
Begin typing your search above and press return to search.

தென் மாநிலங்களில் இனி பா.ஜ.க ஆட்சிதான் - ஹைதராபாத்தில் அறிவித்த மோடி, இனிதான் ஆரம்பமா?

தென் மாநிலங்களில் இனி பா.ஜ.க ஆட்சி தான் என ஹைதராபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியும் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் மாநிலங்களில் இனி பா.ஜ.க ஆட்சிதான் - ஹைதராபாத்தில் அறிவித்த மோடி, இனிதான் ஆரம்பமா?

Mohan RajBy : Mohan Raj

  |  4 July 2022 8:15 AM GMT

தென் மாநிலங்களில் இனி பா.ஜ.க ஆட்சி தான் என ஹைதராபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியும் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான வேலைகளை கட்சிகள் இப்பொழுதே தொடங்கிவிட்டன. கடந்த முறை சட்டமன்றத்தை கலைத்துவிட்டு முன்னரே தேர்தலை சந்தித்த சந்திரசேகர ராவ் அந்த சமயத்தில் பா.ஜ.க'விற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார்.

இந்நிலையில் பா.ஜ.க தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க மிகவும் முனைப்பு காட்டி வருகிறது, இந்த நிலையில் பா.ஜ.க தேசிய செயற்குழு கூட்டம் ஹைதராபாத்தில் நடந்தது கூட்டத்தை குத்துவிளக்கேற்றி அக்கட்சியின் தலைவர் ஜே பி நட்டா துவங்கி வைத்தார்.


அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் முன் பிரதமர் மோடி தனத்தை ட்விட்டர் பதிவில் பா.ஜ.க தேசிய குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஆற்றல் மிக்க ஹைதராபாத் நகருக்கு வந்து இறங்கியுள்ளேன். இந்த கூட்டத்தில் கட்சியை மேலும் பலப்படுத்தும் வகையில் பல்வேறு பறந்த விஷயங்கள் குறித்து விவாதிப்போம்' என குறிப்பிட்டு இருந்தார்.

பா.ஜ.க'வில் உள்ள அனைத்து தலைவர்களும் நேற்று ஹைதராபாத்தில் குழுமி இருந்தார்கள், தற்பொழுது பா.ஜ.க'வின் கவனம் முழுவதும் தென் இந்தியாவில் பதிந்துள்ளது, அந்த வகையில் தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் கேரள மாநிலங்களே பா.ஜ.க'வின் முழு முதற்கண் இலக்காகும். நேற்று பேசும்போது கூட பிரதமர் மோடி, 'வாரிசு அரசியல் இனி எடுபடாது, வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது' என்கிற ரீதியில் பேசியது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக தமிழகத்தை குறி வைத்து பா.ஜ.க தற்போது பணிகளை துவக்கி உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Source - Asianet news

Next Story
கதிர் தொகுப்பு
Trending News