Kathir News
Begin typing your search above and press return to search.

மதுவிலக்கா? அப்டின்னா என்ன? நாங்க யாரும் சொல்லலையே! - தமிழக மக்கள் தலையில் மண் அள்ளி போட்ட திமுக

'திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்படுத்துவம் என தேர்தல் அறிக்கையில் கூறவில்லை'

மதுவிலக்கா? அப்டின்னா என்ன? நாங்க யாரும் சொல்லலையே! - தமிழக மக்கள் தலையில் மண் அள்ளி போட்ட திமுக
X

Mohan RajBy : Mohan Raj

  |  1 Feb 2023 10:41 AM IST

'திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்படுத்துவம் என தேர்தல் அறிக்கையில் கூறவில்லை' திமுக எம்.பி கனிமொழி கூறிய விவகாரம் கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்பொழுது திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகப் போகின்றது. திமுகவின் தேர்தல் பரப்புரைகளில் முக்கியமான பரப்புரையாக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற பரப்புரையை இன்னும் திமுக நிறைவேற்ற வில்லை.

அது பற்றி அறிவிப்போ, அறிக்கைகளோ ஏதும் திமுக தரப்பில் இதுவரை இல்லை! இந்த நிலையில் தற்போது கனிமொழி அவர்கள் திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு கொண்டு வருவோம் என நாங்கள் சொல்லவில்லை என கூறி பல்டி அடித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுக தேர்தல் பரப்புரையின் போது திமுகவின் முக்கிய தலைவர்களான கருணாநிதி குடும்பத்தினரான அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி மற்றும் கனிமொழி ஆகிய மூவரும் மதுவிலக்கை பற்றி பேசி உள்ளனர்.

குறிப்பாக இன்றைய தமிழக முதல்வர் ஸ்டாலின் அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் போது திமுக ஆட்சிக்கு வந்தால் ஒரு சொட்டு மது கூட இருக்காது என உறுதி அளிக்கிறோம் மேலும் திமுக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தாக மதுவிலக்கு கையெழுத்து இருக்கும் எனவும் தேர்தல் பரப்புரையில் கூறி கைத்தட்டு மட்டுமல்ல ஒட்டு கூட வாங்கினார்


அடுத்தபடியாக திமுகவின் பட்டத்தை இளவரசர் உதயநிதி திமுக ஆட்சிக்கு வந்தவுடன் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என கடந்த பிப்ரவரி மாதம் 2019 ஆம் ஆண்டு கண்டமனூர், பிச்சம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

மேலும் நாங்க எப்போ மதுவிலக்கு பத்தி சொன்னோம் நாங்கள் சொல்லவே இல்லையே என கேட்கும் கனிமொழி கூட கனிமொழி கூட அப்பொழுது 'இந்தியாவிலேயே அதிகமாக இளம் விதவைகள் இருக்கக்கூடிய மாநிலமாக தமிழகம் மாறிக்கொண்டிருக்கிறது காரணம் குடிப்பழக்கம்' அப்டின்னு தமிழக பெண்கள் மீது ரொம்ப அக்கறையில பேசினாருங்க!

அட அது மட்டுமா பேசினாரு, வேற ஒரு கூட்டத்துல, தமிழ்நாட்டுல மதுக்கடைகள் இருக்க கூடாது அப்டின்னு ஒவ்வொரு பொண்ணோட ஆசையா இருக்கு, நீங்க ஆசைப்பட்ட மாதிரியே திமுக ஆட்சிக்கு வந்த உடனே தலைவரு முதல் கையெழுத்தை மதுஒழிப்புக்கு தான் போடுவாரு அப்டின்னு வேற பேசினாங்க அதுக்கு கைத்தட்டல் வேற பார்க்கணுமே!

இப்படி மாவட்டத்துக்கு மாவட்டம்! தொகுதிக்கு தொகுதி! ஊருக்கு ஊர்! வீதிக்கு வீதி! தெருவுக்கு தெரு மைக் புடிச்ச இடத்துல எல்லாம் மதுவிலக்கு பத்தி பேசினது மட்டுமில்லாம, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவே இருக்காது என கூறி ஓட்டு கேட்டு மக்களை ஆசை கட்டி குறிப்பா பெண்கள் ஓட்டை குறிவச்சு பேசி அதுமாதிரியே ஒட்டு வாங்கி ஜெயிச்சுட்டு இப்ப வந்து நாங்க அப்படியா சொன்னோம்? சொல்லவே இல்லை அப்டின்னு எப்படி உல்ட்டாவா பேசுறாங்க பாருங்க

இப்டி இத்தனை மீடியா சுத்தி இருக்கறப்ப இவ்ளோ ஏமாத்துறீங்களே? இதெல்லாம் இல்லாத காலத்துல எப்படி ஏமாத்திருப்பாங்கன்னு மக்கள் பேசுறத கேட்க முடியுதுங்க!

Next Story
கதிர் தொகுப்பு
Trending News