இறந்தவர்கள் பெயரில் சொத்துகள் - கனிமொழி, ராசாவின் பலே தந்திரம், இடைத்தரகர்களின் தளபதி ஸ்டாலின் - பொன்னையன் தாக்கு!
இறந்தவர்கள் பெயரில் சொத்துகள் - கனிமொழி, ராசாவின் பலே தந்திரம், இடைத்தரகர்களின் தளபதி ஸ்டாலின் - பொன்னையன் தாக்கு!
By : Muruganandham M
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க தலைவர் ஸ்டாலினின் பொய்ப் பிரச்சாரம் செல்லாது என்று சேலத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், சேலம் மண்டல அ.தி.மு.க தேர்தல் பொறுப்பாளருமான சி.பொன்னையன் பேசினார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஒரு லட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்த வடநாடுகளில் உயிரோடு இல்லாத நபர்களின் பெயரில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர்.
தமிழக மக்கள் காரி துப்புவார்கள் என்பதைக்கூட உணராமல் தி.மு.க கனிமொழியும், ராசாவும் அந்த அளவிற்கு ஊழல் செய்துள்ளனர். இவர்கள் அம்மாவை பற்றி பேசுவதற்கு எந்த எந்த தகுதியும் இல்லை புரட்சித்தலைவி அம்மா அவர்களை பற்றி தரக்குறைவாக பேசிய ராசாவை தமிழகத்தை விட்டு விரட்ட வேண்டும்.
இந்த சட்டமன்றத் தேர்தலில் மட்டுமல்ல எந்த சட்டமன்ற தேர்தலிலும் தொடர்ந்து அம்மா அவர்கள் கூறியது போல பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் கூறியது போல தொடர்ந்து இந்த ஆட்சி நடைபெறும். எடப்பாடியார் அந்த அளவிற்கு ஆட்சி நடத்தி வருகிறார். வேளாண் சட்டத்துக்கு திமுக எதிர்ப்பு தெரிவிக்கிறது.
அதற்கு காரணம் இடைத்தரகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காகவே விவசாயிகளிடமிருந்து பொருட்களை வாங்கி கொள்ளை லாபத்திற்கு விற்கும் இடைத்தரகர்களின் தளபதியாகவும் திமுக தலைவர் ஸ்டாலின் இருக்கிறார். அதனால் தான் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் சட்டம் வேளாண் சட்டம். விளைவிக்கும், பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் சட்டம் வேளாண் சட்டம்.
தமிழக அரசின் எண்ணற்ற சாதனைகள் திட்டங்களை பொறுத்துக் கொள்ள முடியாத தி.மு.க தலைவர் ஸ்டாலின் தற்போது புதிய பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். கமலஹாசன் உட்பட எதிர்க் கட்சியினரின் பொய்ப்பிரச்சாரம் இந்த தேர்தலில் செல்லுபடியாகாது என்று கூறியுள்ளார்.