சொத்து வரி பல மடங்கு உயர்வு: மக்களுக்கு தி.மு.க. வழங்கும் பம்பர் பரிசு என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
By : Thangavelu
தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரிகள் உயர்த்தப்பட்டுள்ளதற்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரிகள் பல மடங்கு உயர்த்தி திமுக அரசு உத்தரவிட்டுள்ளது. பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 600 சதுர அடிக்கும் குறைவாக இருக்கின்ற குடியிருப்பு கட்டடங்களுக்கு 25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 601 முதல் ஆயிரத்து 200 சதுர அடி வரையிலான கட்டடங்களுக்கு 50 சதவீத வரி உயர்வும், 1201 முதல் 1800 சதுர அடி பரப்பளவு கொண்ட குடியிருப்பு கட்டடங்களுக்கு 75 சதவீத வரி உயர்த்தப்பட்டுள்ளது. 800க்கும் அதிகமான சதுர அடி உள்ள கட்டடங்களுக்கு 100 சதவீத வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனை கேட்டு சாதாரண மக்கள் மிகப்பெரிய அதிர்ச்சிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த சொத்து வரி உயர்வு வெறும் ட்ரைலர்தான் இனிவரும் காலங்களில் மக்களுக்கு
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) April 2, 2022
பல பம்பர் பரிசுகள் காத்திருக்கிறது.(2/2)
இந்நிலையில், இந்த சொத்து வரி தொடர்பாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சட்டமன்ற தேர்தலில் ஆட்சி பொறுப்பேற்றதற்கு பரிசாக பொங்கல் சிறப்பு தொகையை தராமல் திமுக அரசு கைவிரித்ததாக சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், நகர்புற உள்ளாட்சியில் ஆளுங்கட்சிக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு சிறப்பு பரிசாக 150 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தியுள்ளதாக சாடியுள்ளார். இந்த சொத்து வரி உயர்வு வெறும் ட்ரைலர்தான் எனக் குறிப்பிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, இது வெறும் ட்ரைலர்தான் இனிவரும் காலங்களில் மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருக்கிறது. இவ்வாறு அவரது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Source, Image Courtesy: Twiter