பெருமிதம்: தெலுங்கானாவின் முதல் பெண் நீதிபதிக்கு முதல் பெண் ஆளுநர் செய்த பதவிப் பிரமாணம்!
பெருமிதம்: தெலுங்கானாவின் முதல் பெண் நீதிபதிக்கு முதல் பெண் ஆளுநர் செய்த பதவிப் பிரமாணம்!
By : Saffron Mom
தெலுங்கானா உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நீதிபதி ஹிமா கோலி ஹைதராபாத்தில் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவருக்கு பதவிப் பிரமாணம் ராஜ்பவனில் செய்துவைத்தார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், அமைச்சர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், மூத்த மாநில அதிகாரிகள் மற்றும் பல முக்கியஸ்தர்களும் இந்த விழாவில் பங்கேற்றனர்.
Hon'ble #GovernorOfTelangana #DrTamilisaiSoundararajan Administered oath of office to Kumari Justice Hima Kohli,as Chief Justice,High Court for the State of #Telangana at #Rajbhavan today. Hon'ble @TelanganaCMO Shri K.Chandrashekar Rao was present at the Swearing-in Ceremony. pic.twitter.com/pfdRxFbgiS
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) January 7, 2021
நீதிபதி கோலி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பதவி பணிபுரிந்து வந்தார். தற்போது தெலுங்கானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணி உயர்வு பெற்றுள்ளார். ஏற்கனவே பதவியில் இருந்த நீதிபதி ராகவேந்திரா சிங் சௌஹான் உத்தரகாண்ட் நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்ற பரிந்துரையின் பேரில் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திரா, தெலுங்கானா என ஒருங்கிணைந்த ஆந்திரப்பிரதேசம் பிரிந்த பிறகு தெலுங்கானாவுக்கு தனியாக உயர் நீதிமன்றம் ஜனவரி 1, 2019ல் அமைக்கப்பட்டது. அதன் பிறகு அங்கு தலைமை நீதிபதியாக பதவி ஏற்கும் முதல் பெண் நீதிபதி கோலி ஆவார்.
முதலில் நீதிபதி ராதாகிருஷ்ணன் பதவி புரிந்து வந்தார், ஆனால் சில மாதங்களுக்குள் அவர் கல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். அவருடைய இடத்தில் நீதிபதி சவுகான் பணிபுரிந்து வந்தார். ஒரு பெண் நீதிபதிக்கு ஒரு பெண் ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தது ஒரு நெகிழ்வான நிகழ்ச்சியாக அமைந்தது. தெலுங்கானாவின் முதல் பெண் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் என்பதும் குறிப்பிடத்தக்கது.