Kathir News
Begin typing your search above and press return to search.

"குடும்பத்தலைவிகளுக்கு 1000 ரூபாய் கொடுக்குறாங்களாம் புதுச்சேரி பா.ஜ.க கூட்டணி அரசு! இங்கே எப்போ" - தி.மு.க அரசை நோக்கி திரும்பும் குடும்பத்தலைவிகள்

புதுச்சேரி அரசு குடும்பத்தலைவிகளுக்கு 1000 ரூபாய் வாக்குறுதியை பொங்கல் பண்டிகை முதல் செயல்படுத்துவதாக அறிவித்துள்ளது.

குடும்பத்தலைவிகளுக்கு 1000 ரூபாய் கொடுக்குறாங்களாம் புதுச்சேரி பா.ஜ.க கூட்டணி அரசு! இங்கே எப்போ - தி.மு.க அரசை  நோக்கி திரும்பும் குடும்பத்தலைவிகள்

Mohan RajBy : Mohan Raj

  |  2 Jan 2023 7:32 AM GMT

புதுச்சேரி அரசு குடும்பத்தலைவிகளுக்கு 1000 ரூபாய் வாக்குறுதியை பொங்கல் பண்டிகை முதல் செயல்படுத்துவதாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தி.மு.க ஜெயிக்க முக்கிய காரணமாக இருந்த குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத்தொகை என்ற வாக்குறுதி இதுவரை செயல்படுத்த முடியாத நிலையில் புதுவையை ஆளும் பா.ஜ.க என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசு செயல்படுத்தி காண்பித்து சாதித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை வழங்குவோம் என கடந்த சட்ட மன்ற தேர்தலில் தி.மு.க வழங்கிய 505 வாக்குறுதிகளில் முக்கியமான வாக்குறுதி ஆகும். ஆனால் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என்ற வாக்குறுதியை தி.மு.க ஆட்சிக்கு வந்து 20 மாதங்கள் ஆகியும் நிறைவேற்ற வில்லை. அதற்கு நிதி நிலைமை சரியில்லை, ஆராய்ந்து வருகிறோம் என பல கதைகளை கூறி வருகின்றனர், ஆனாலும் மக்கள் அதனை நம்ப தயாராகவில்லை.

குறிப்பாக குடும்ப தலைவிகள் எந்த காரணத்திற்காக தி.மு.க'விற்கு ஓட்டு போட்டார்களோ அதுவே கிடைக்காமல் இருக்கும் நிலையில் இவர்கள் ஏமாற்றுக்காரர்கள் என்பதை புரிந்து கொண்டு விட்டார்கள், இதனால் குடும்ப தலைவிகள் தி.மு.க அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர். ஏற்கனவே அரசு ஊழியர்கள், அரசு ஆசிரியர்கள், ஒப்பந்த செவிலியர்கள், ஓய்வூதியர்கள், போக்குவரத்துக் கழகத்தினர் என தி.மு.க அரசு மீது கோபத்தில் இருப்பவர்கள் பட்டியலில் மத்தியில் குடும்ப தலைவிகள் முதலிடத்தை பிடித்துள்ளனர்.

இதன் காரணமாகவே வரும் தேர்தல்களில் தி.மு.க பெரும்பான்மையே கிடைக்காமல் திண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது, குறிப்பாக குடும்ப தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்ற தி.மு.க'வின் வாக்குறுதி சட்டமன்ற தேர்தலின் போது பெண் வாக்காளர்களை பெரிதாக கவர்ந்தது தி.மு.க வெற்றி பெற்றவுடன் ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை தமிழக அரசு வழங்கும் என குடும்பத் தலைவிகள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் குடும்பத் தலைவிகள் தலையில் இடியை இறக்குமாறு கூறியதாவது, 'மாநிலத்தின் நிதிநிலையை சரி செய்து கொண்டிருக்கிறோம், நிதிநிலை சரியான பிறகு திட்டம் அமல்படுத்தப்படும்' என கூறியது குடும்பத் தலைவிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும் பல குடும்பத்தலைவிகள் 'வாக்குறுதி கொடுக்கும் போது இது தெரியவில்லையா? வாக்குறுதி கொடுக்கும்போது ஒரு மாநிலத்தின் நிதிநிலைமை எவ்வாறு இருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் அறிந்திருக்க வேண்டும்! எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பொழுது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பாலாறும், தேனாறும் ஓடும் என விளம்பரம் செய்துவிட்டு எங்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி ஆட்சியில் அமர்ந்து விட்டு தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு ஆராய்ந்து கொண்டிருக்கிறோம் என முதல்வர் கூறுவது அவரின் ஏமாற்றுத்தனத்தை காட்டுகிறது' என்றே கூறுகின்றனர்.

மேலும் குடும்பத் தலைவிகளை கோபப்படுத்தும் விதமாக சர்ச்சைகளுக்கு பெயர்போன நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனோ. 'குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை வழங்க தகுதியான குடும்ப அட்டைதாரர்களின் பெயர்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது' என கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தெரிவித்தார். இது மேலும் குடும்பத் தலைவிகளை மேலும் கோபமாகியது, 'அப்போ வெறுமனே வார்த்தை ஜாலங்களை வீசிதான் இவர்கள் ஓட்டு வாங்கி விட்டார்கள்' என குடும்பத் தலைவிகள் முத்திரை குத்திவிட்டனர். மேலும் 'தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும்தான் நாங்கள் ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என தேர்தல் சமயத்தில் கூறி இருந்தால் தெரிந்து இருக்கும் தி.மு.க'வின் இலட்சணம்' எனவும் குடும்ப தலைவிகள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவார்களா என்கிற சந்தேகம் குடும்பத் தலைவிகள் மத்தியில் எழுந்துள்ள நேரத்தில் புதுச்சேரியை ஆளும் பா.ஜ.க என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசு இந்த மாதம் முதல் ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளது புதுச்சேரி குடும்பத் தலைவிகள் மத்தியில் சந்தோஷத்தை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல் தமிழகத்தில் பல குடும்பத் தலைவிகள் மத்தியில் பொறாமையும் ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் டிசம்பர் 29 ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி குடும்பத் தலைவிகளுக்கு புத்தாண்டு வாழ்த்து செய்தி கூறும் விதமாக, 'அரசின் மாதாந்திர உதவித் தொகை எதுவும் பெறாத 21 முதல் 55 பதவிக்குள் இருக்கும் ஏழை குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் பட்ஜெட்டில் அறிவித்திருந்தோம், இந்த திட்டம் வரும் பொங்கலுக்குள் தொடங்கப்படும்' என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் புதுச்சேரி குடும்பத்தலைவிகள் உற்சாகமடைந்துள்ளனர்.

இந்த தகவல் தமிழக குடும்ப தலைவிகள் மத்தியில் பரவிய நிலையில் புதுவையில் பா.ஜ.க கூட்டணி அரசு அறிவித்துவிட்டது ஏன் அமல்படுத்தவே போகிறது தமிழகத்தில் எங்களை ஏமாற்றி ஓட்டு வாங்கிய தி.மு.க என்ன செய்யப் போகிறது என்ற கேள்வியை எழுப்ப தொடங்கிவிட்டனர்.

ஏற்கனவே ஒரு பக்கம் ஆசிரியர்கள், மறுபக்கம் அரசு ஊழியர்கள், மறுபுறம் போக்குவரத்து துறை ஊழியர்கள், மறுபுறம் செவிலியர்கள் என எட்டு திசைகளும் தி.மு.க அரசை வாக்குறுதி எங்கே என கேள்வி கேட்டு போராட்டம் நடத்தி வரும் நிலையில் குடும்பத் தலைவிகள் வரட்டும் அடுத்த தேர்தலுக்கு தி.மு.க'வினர் எப்படி வாக்கு கேட்டு வருகிறார்கள் என பார்க்கலாம் என எதிர்பார்த்து காத்திருப்பது வரும் தேர்தலில் ஓட்டு கேட்டு செல்லவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது தி.மு.க'விற்கு.


Source - Junior Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News