Begin typing your search above and press return to search.
புதுச்சேரி பா.ஜ.க., எம்.எல்.ஏ., மறைவையொட்டி மூத்த தலைவர் எச்.ராஜா இரங்கல்.!
புதுச்சேரி பா.ஜ.க., எம்.எல்.ஏ., மறைவையொட்டி மூத்த தலைவர் எச்.ராஜா இரங்கல்.!

By :
புதுச்சேரி பாஜகவின் நியமன எம்.எல்.ஏ.வும் அம்மாநிலப் பொருளாளருமான சங்கர் இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பாஜக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
70 வயதான இவர், 1985 முதல் புதுச்சேரி மாநில பாஜக பொருளாளராகப் பதவி வகித்து வந்தார். அவரது உடல் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், அவரது மறைவையொட்டி பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்: புதுச்சேரி மாநில பாஜக பொருளாளரும், புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினருமான திரு.கே.ஜி.சங்கர் எம்.எல்.ஏ., அவர்களின் மறைவு செய்தி வருத்தமளிக்கிறது.
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Next Story