Kathir News
Begin typing your search above and press return to search.

பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ்வே திட்டம் பற்றி 10 பொய்கள்: அகிலேஷின் போலி முகத்திரையைக் கிழித்த யோகி ஆதித்யநாத் அரசு!

உத்தரபிரதேச மாநிலம், லக்னோ மாவட்டத்தில் உள்ள சவுட்சராய் கிராமத்தில் பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ்வே திட்டம் ஆரம்பமாகி, சவுட்சராய் கிராமத்தில் முடிவடைகிறது. சுமார் 341 கிலோ மீட்டர் நீளம்கொண்டதாகும். இது அதிவேகச் சாலையும் ஆகும். ரூ.22,500 கோடியில் மூன்று ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டு தற்போது மக்களின் பயன்பாட்டுக்குள் வந்துவிட்டது.

பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ்வே திட்டம் பற்றி 10 பொய்கள்: அகிலேஷின் போலி முகத்திரையைக் கிழித்த யோகி ஆதித்யநாத் அரசு!

ThangaveluBy : Thangavelu

  |  17 Nov 2021 10:01 AM GMT

உத்தரபிரதேச மாநிலம், லக்னோ மாவட்டத்தில் உள்ள சவுட்சராய் கிராமத்தில் பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ்வே திட்டம் ஆரம்பமாகி, சவுட்சராய் கிராமத்தில் முடிவடைகிறது. சுமார் 341 கிலோ மீட்டர் நீளம்கொண்டதாகும். இது அதிவேகச் சாலையும் ஆகும். ரூ.22,500 கோடியில் மூன்று ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டு தற்போது மக்களின் பயன்பாட்டுக்குள் வந்துவிட்டது.

இந்த எக்ஸ்பிரஸ்வே சாலையானது சுமார் 9 மாவட்டங்களை இணைத்துள்ளது. இதனிடையே சமாஜ்வாதி கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் ஆசம்கர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்வாகியுள்ளார். அது மட்டுமின்றி 36 சதவீத நாட்கள் மட்டும் நாடாளுமன்றத்துக்கு வருகை புரிந்தவரும் ஆவார்.


இந்நிலையில், பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ்வே திட்டம் பற்றி தொலைக்காட்சிக்கு அகிலேஷ் யாதவ் பேட்டி ஒன்று அளித்தார். அவர் முன்னுக்குப் பின் முரணான பல்வேறு வகையிலான தகவல்களை கூறியுள்ளதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. மேலும் சாலைக் குறித்து 10 பொய்களையும் அவிழ்த்து விட்டுள்ளார். அவை அனைத்தும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டு என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு நிரூபணம் செய்துள்ளது.

ஒன்றாவது பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ்வே திட்டமானது சமாஜ்வாதி கட்சியின் திட்டம் எனவும், பாஜக அரசு அத்திட்டத்துக்கு உரிமை கொண்டாடுவதாக அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டினார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக, இத்திட்டமானது சமாஜ்வாதி ஆட்சியின்போது வெறும் காகித அளவில் மட்டு இருந்தது. தற்போது யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு வெற்றிகரமாக நிறைவு செய்து மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விட்டுள்ளது.


2வது குற்றச்சாட்டான பூர்வாஞ்சல் திட்டத்துக்கு தன்னுடைய அரசு டெண்டர் கோரியது. ஆனால் யோகி ஆதித்யநாத் அரசு ரத்து செய்துவிட்டது என அகிலேஷ் யாதவ் கூறியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக, திட்டத்துக்கு 25 சதவீத நிலங்கள் கூட கையகப்படுத்தாத அகிலேஷ் அரசு டெண்டர் கோரியதாக கூறப்படும் செய்தி உண்மைதான்.

3வது குற்றச்சாட்டான, நெடுஞ்சாலை பொறியாளர்கள் உருவாக்கிய இந்தியன் ரோட்ஸ் காங்கிரஸ் (ஐ.ஆர்.சி) அமைப்பின் விதிகளின்படி நெடுஞ்சாலையின் நடுவே 12 முதல் 14 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். ஆனால் அதனை விட்டு மிகவும் கூடுதலான இடைவெளி தேவை என்ற ரீதியில் அகிலேஷ் யாதவ் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதில் வருமாறு, ஐ.ஆர்.சி. விதிகளின்படியே நெடுஞ்சாலை வெற்றிகரமாக அமைக்கப்பட்டுள்ளது.

4வது குற்றச்சாட்டாக, நெடுஞ்சாலையில் வாகன சவாரி மிகவும் சரியில்லை என கூறியிருந்தார். அதற்கு பதில் வருமாறு, சவாரி தரம் மிகவும் சிறப்பாக அமைந்திருப்பதாகவும், ஐ.ஆர்.சி. வெளியிட்டுள்ள விதிகளின்படியே சவாரி தரம் அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

5வது குற்றச்சாட்டான, இச்சாலையில் மண் அரிப்பைத் தடுப்பதற்கு சிலிக்கான் ஷீட்டுகள் உபயோகப்படுத்தவில்லை. அதற்கு பதில் வருமாறு, அதனைவிட மிகவும் முன்னேறிய தொழில்நுட்பமான ஜியோசெல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

6வது டவுன் குற்றச்சாட்டாக, டவுன் பஞ்சாயத்துகள் மற்றும் கிராமங்களை இணைக்க அணுகு சாலைகள் (சர்வீஸ் சாலைகள்) இல்லை என குற்றம்சாட்டியிருந்தார். அதற்கு பதில் வருமாறு, இத்திட்டத்தில் சுமார் 397 கிலோ மீட்டர் தூரத்துக்கு அணுகு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் ஒரு வழியிலும் பல இடங்களில் இரண்டு புறங்களிலும் இந்த அணுகுசாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.


7வது குற்றச்சாட்டாக, பல்வேறு இடங்களில் கழிப்பறை உள்ளிட்ட பல அடிப்படை வசதிகள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். அதற்கு பதில் வருமாறு, இந்த சாலை முழுவதிலும் சுமார் 16 இடங்களில் பயணிகளுக்கான கழிப்பறை வசதிகள் மற்றும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

8வது குற்றச்சாட்டாக, எக்ஸ்பிரஸ்வே சாலையில் தற்போது பொருத்தப்பட்டுள்ள மின்விளக்குகள் தரமானதாக இல்லை. அதற்கு பதில் வருமாறு, இரவு நேரங்களிலும் வாகன ஓட்டிகளின் கண்களுக்கு புலப்படும் வகையில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சிறுபாலங்கள், சுரங்கப்பாதைகளில் பயணம் செய்யும்போது நல்ல முறையில் தெளிவாக தெரிவதற்கு மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.

9வது குற்றச்சாட்டான, இத்திட்டத்தில் அனுபவம் இல்லாத நிறுவனங்களிடம் ஒப்படைத்தாக அகிலேஷ் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். அதற்கு பதில் வருமாறு, மிகவும் நியாயமான முறையில் இ டெண்டரிங் விடப்பட்டு காயத்ரி புராஜக்ட்ஸ், ஜி.ஆர் இன்பிரா புராஜக்ட்ஸ் ஆப்கோ இன்பிராடெக், பி.என்.சி. இன்பிராடெக், ஓரியண்டல் ஸ்டிரக்சுரல் இன்ஜினீயர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களிடம் திட்டம் ஒப்படைக்கப்பட்டு வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.

10வது குற்றச்சாட்டாக, தன்னுடைய அரசு குறிப்பிட்ட அளவிலான திட்டம் கட்டமைக்கப்படாமல் தரம் குறைந்த நிலையில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டை முன்வைத்தார். அதற்கு பதில் வருமாறு, மிகச்சிறந்த பொறியார்களை வைத்து டிசைன்கள் வடிவமைக்கப்பட்டு மிகவும் தரமான முறையில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது என்று அரசு பதில் அளித்துள்ளது.

ஆக்ரா, லக்னோ எக்ஸ்பிரஸ்வே திட்டத்தை விடவும், பூர்வாஞ்சல் திட்டம் மிகவும் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக அகிலேஷ் வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்களே என்பது நிரூபணமாகியுள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அகிலேஷ் முயற்சி செய்து வருவது தற்போதைய பொய்கள் தெரியவருகிறது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Hindu Tamil

Image Courtesy:Opindia


Next Story
கதிர் தொகுப்பு
Trending News