ரேஷன் கடையா இல்லை தி.மு.க. அலுவலகமா.. ஊழியரின் செயலால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்.!
தமிழக அரசு அனைத்து அரிசி அட்டை தாரர்களுக்கும் ரூ.2,000 கொரோனா நிவாரணமாக வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டது. இதனையடுத்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் ரேசன் கடைகளில் பணம் கொடுக்கும் பணியானது தொடங்கியுள்ளது.

குறிப்பிட்ட இடங்களில் அமைச்சர்கள் நேரடியாக சென்று பணத்தை பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்துள்ளனர். அது போன்ற சமயங்களில் திமுக கட்சியின் கொடியை கட்டியும் பணம் வழங்கும் நிகழ்வுகள் நடைபெறுகிறது.
அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு ரேஷன் கடையில் திமுக கொடியை கட்டி, அதன் பின்னர் பொதுமக்களுக்கு ரூ.2,000 வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசுதான் பணத்தை வழங்குகிறது. எனவே திமுக கொடியை ரேசன் கடைகளில் எப்படி கட்டலாம் என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
பல இடங்களில் இது போன்ற கொடிகளை கட்டி பணம் வழங்குவதை பார்க்க முடிகிறது. ஆளுங்கட்சி என்றால் அவர்களின் கொடியை அரசு அலுவலகங்களில் கட்டலாமா எனவும் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்தால் மற்ற அரசியல் கட்சியினரும் தங்களின் கொடிகளை ரேசன் கடைகளில் கட்ட முன்வருவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் குரலாகும்.