Kathir News
Begin typing your search above and press return to search.

காங்கிரஸ் தலைவர் பதவி - பயந்து ஒதுங்கும் ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். காங்கிரஸ் காரியக் கமிட்டி வற்புறுத்திய போதிலும் ஏற்கவில்லை.

காங்கிரஸ் தலைவர் பதவி - பயந்து ஒதுங்கும் ராகுல் காந்தி

KarthigaBy : Karthiga

  |  22 Aug 2022 6:30 AM GMT

கடந்து 2019ஆம் ஆண்டு மே மாதம் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததால் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார்.அவரை பதவியில் நீடிக்க காங்கிரஸ் காரிய கமிட்டி வற்புறுத்திய போதிலும் அவர் ஏற்கவில்லை.

அதையடுத்து இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார். 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் எதிர்த்து அதிருப்தி தலைவர்கள் 23 பேர் கீழ்மட்டத்தில் இருந்து காங்கிரஸ் தலைவர் பதவி வரை உட்கட்சி தேர்தலை நடத்துமாறு சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார்.

பின்னர் கடந்த ஆண்டு காங்கிரஸ் காரிய கமிட்டி உட்கட்சி தேர்தல் அட்டவணை வெளியிட்டது அதன்படி கீழ்மட்ட தேர்தல் முடிந்து விட்டன காங்கிரஸ் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 21ம் தேதியிலிருந்து செப்டம்பர் 20-ஆம் தேதிக்குள் நடத்தப்படும் என்று காரியக் கமிட்டி அறிவித்திருந்தது.

இந்நிலையில் காங்கிரசின் தேர்தல் பிரிவு தலைவர் மதுசூதன் மிஸ்திரி ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது திட்டமிட்டபடி செப்டம்பர் 20-ஆம் தேதிக்குள் காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடத்தப்படும் சரியான தேததியை காரிய கமிட்டி முடிவு செய்து அறிவிக்கும்.

இதற்காக விரைவில் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறும். அதன் முடிவுக்காக காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.அதே சமயத்தில் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட ராகுல்காந்தி தொடர்ந்து மறுத்து வருகிறார் அவர் அந்த பதவியை ஏற்க ஆர்வமின்றி இருப்பதாக மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அவர் மறுத்த போதிலும் அவர்தான் தலைவர் பதவியை ஏற்க வேண்டும் என்று பெரும்பாலான நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.நேரு குடும்பத்தைச் சாராத வேறு நிர்வாகிகளை தலைவர் பதவியில் நியமிக்க முறையான ஆலோசனை எதுவும் நடக்கவில்லை.


இந்த குழப்ப நிலைக்கு முடிவுகட்ட சோனியா காந்தியே தலைவர் பதவியில் தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று சில தலைவர்கள் யோசனை தெரிவித்து வருகிறார்கள்.

அதே சமயத்தில் தேர்தல் எப்படி நடத்தப்படுகிறது என்பதை ஜி-23 குழுவை சேர்ந்த அதிருப்தி தலைவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.


Source-maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News