Kathir News
Begin typing your search above and press return to search.

முதல்முறையாக ராஜிவ் காந்தியின் நினைவிடம் வந்த ராகுல் - இதுவரைக்கும் வராமல் தேர்தலை முன்னிட்டு எட்டி பார்க்கும் தந்திரம்

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தன் தந்தை ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு முதல்முறையாக வந்து செல்லும் ராகுல் காந்தி

முதல்முறையாக ராஜிவ் காந்தியின் நினைவிடம் வந்த ராகுல் - இதுவரைக்கும் வராமல் தேர்தலை முன்னிட்டு எட்டி பார்க்கும் தந்திரம்
X

KarthigaBy : Karthiga

  |  7 Sept 2022 7:00 PM IST

முதல்முறையாக தன் தந்தை நினைவிடத்திற்கு இன்று ராகுல் வந்து செல்கிறார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மறைந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 2003ஆம் ஆண்டு ராஜீவ் காந்திக்கு ஸ்ரீபெரும்புதூரில் நினைவிடம் கட்டி முடித்து திறக்கப்பட்டது. இந்த நினைவிடத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி உள்ளனர்.


ஆனால் ராகுல் காந்தி இதுவரை வந்ததில்லை .15 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருமுறை ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் ராஜீவ் காந்திக்கு அஞ்சலி செலுத்த ஸ்ரீபெரும்புதூருக்கு வந்தனர். நினைவிடத்தின் அருகே காரை விட்டு இறங்கியதும் பிரியங்கா துக்கம் தாளாமல் தரையில் அமர்ந்து கதறி அழுதார் .அருகில் நின்று தனது தங்கை பிரியங்காவை ஆறுதல் படுத்த முயன்றார். ஆனால் அவரை ஆறுதல் படுத்த முடியவில்லை.


அதனால் நினைவிடத்திற்கு செல்லாமலேயே தங்கையை காரில் அழைத்து அங்கிருந்து சென்றுவிட்டார். அதன் பிறகு இப்போதுதான் ராகுல் காந்தி முதல் முறையாக தன் தந்தையின் நினைவிடத்திற்கு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News