Kathir News
Begin typing your search above and press return to search.

எழும்பியது 'ஜெய்ஸ்ரீராம்' கோஷங்கள்.! பேசாமல் மேடையை விட்டு இறங்கிய மம்தா பானர்ஜி.!

எழும்பியது 'ஜெய்ஸ்ரீராம்' கோஷங்கள்.! பேசாமல் மேடையை விட்டு இறங்கிய மம்தா பானர்ஜி.!

எழும்பியது ஜெய்ஸ்ரீராம் கோஷங்கள்.! பேசாமல் மேடையை விட்டு இறங்கிய மம்தா பானர்ஜி.!
X

Saffron MomBy : Saffron Mom

  |  24 Jan 2021 12:30 PM IST

நேதாஜியின் பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்காக கொல்கத்தாவின் விக்டோரியா மெமோரியலில் பொதுமக்கள் கூடியிருந்தனர்.

அங்கே பிரதமர் நரேந்திர மோடி, அம்மாநில ஆளுநர், முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் முதல்வர் மம்தா பானர்ஜி உரையாற்ற அழைக்கப்பட்ட பொழுது அங்கிருந்த மக்கள் 'ஜெய் ஸ்ரீராம்', 'பாரத் மாதா கி ஜே' போன்ற முழக்கங்களை எழுப்பினர்.

இதை சற்றும் பொறுத்துக்கொள்ள முடியாத மம்தா பானர்ஜி,தான் அவமதிக்கப்பட்ட தாக கூறி மேடையிலிருந்து பேசாமல் வெளியேறினார். ஜெய்ஸ்ரீ ராம் கோஷங்கள் எழும்பிய பிறகு மம்தா பானர்ஜி மேடையில் இருந்து வெளியேறுவதற்கு முன்பு, "ஒருவரை அழைப்பதும் பிறகு அவர்களை அவமதிப்பதும் அரசாங்கத்திற்கு பொருந்தாது. இது ஒரு அரசாங்க திட்டம். ஒரு அரசியல் கட்சியின் திட்டம் அல்ல என்று கூறிவிட்டு வெளியேறினார்.

பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மற்றும் ஆளுநர் ஜெகதீஷ் தங்கர் ஆகியோர் சனிக்கிழமை விக்டோரியா மெமோரியல் மையத்தில், சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசை 124வது பிறந்தநாளில் கௌரவித்தனர்.

இந்நிலையில் ஏற்பட்ட சர்ச்சையின் பொழுது பிரதம மந்திரி உட்பட பல பிரமுகர்கள் மேடையில் இருந்த பொழுதே மம்தா மேடையில் இருந்து வெளியேறினார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் 'பரக்ரம் திவாஸ்' என்று அழைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தாலும், ரவீந்திரநாத் தாகூர் நேதாஜிக்கு தேஷ் நாயக் என்ற பட்டத்தை வழங்கியதால் இதை தேஷ் நாயக் திவாஸ் என்று அறிவிக்குமாறு மம்தா பானர்ஜி மத்திய அரசைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

நேற்று மம்தா பேனர்ஜி ஷியாம்பஜாரிலிருந்து, கொல்கத்தாவின் ரோட்டிற்கு அணிவகுத்துச் சென்றார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மூதாதையர் இல்லத்திற்கு ஒரு பயணத்தை மேற்கொண்டார்.

அப்பொழுதுதான் மத்திய அரசின் முடிவை அவர் விமர்சித்தார். மோடி அரசு தனது கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்று மம்தா பானர்ஜி ஏற்கனவே எரிச்சல் அடைந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் விக்டோரியா மெமோரியல் கூடியிருந்த கூட்டம் அவரை 'ஜெய்ஸ்ரீராம்' கோஷங்களுடன் வரவேற்க முடிவு செய்தது. இது பா.ஜக.வின் வேண்டுமென்றே செய்த முயற்சி அவர் கருதுகிறார்.

பிரதமர் உட்பட தலைவர்கள் கூடியிருந்த மேடையில் இருந்து பேசாமல் வெளியேறிய மம்தா பானர்ஜி, 'தான் 'அவமதிக்கப்பட்ட கூறுவது நகைமுரண் ஆகும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News