காங்கிரஸ் அமைச்சர் மகன் மீது பாலியல் பலாத்கார புகார் - பேஸ்புக் மூலம் ஏமாற்றியதாக இளம்பெண் கண்ணீர்!
By : Thangavelu
பேஸ்புக் மூலமாக அறிமுகமாகி இளம்பெண் ஒருவருக்கு குளிர்பானத்தில மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக ராஜஸ்தான் காங்கிரஸ் அமைச்சர் மகன் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. அங்கு முதலமைச்சராக அசோக் கெலாட் பதவியில் உள்ளார்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைமையிலான அமைச்சரவையில் பொது சுகாதாரதுறை அமைச்சராக மகேஷ் ஜோஷி உள்ளார். இவரது மகன் ரோகித் ஜோஷி 23, இவர் மீது டெல்லி காவல்துறையில் இளம்பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது அந்த இளம்பெண் காவல்துறையில் அளித்துள்ள புகார் மனுவில், கடந்த ஆண்டு பேஸ்புக் மூலமாக இருவருக்கும் அறிமுகம் கிடைத்தது. அதன் பின்னர் செல்போன் நம்பரை வாங்கி இருவரும் உரையாடினோம். அதில் நேரடியாக ஜெய்ப்பூரில் சந்தித்துக் கொண்டோம். இதற்கிடையில், தன்னை சவாய் மாதோபூருக்கு வரும்படி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 8ம் தேதி ரோகித் கூறினார். அங்கு சென்றபோது குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்.
மறுநாள் நான் கண்விழித்து பார்த்தபோது ஆடையின்றி நான் இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை காண்பித்து மிரட்டினார் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதே போன்று பலமுறை வீடியோக்களை காண்பித்து பலாத்காரம் செய்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து ரோஹித் ஜோஷி மீது கற்பழிப்பு மற்றும் போதைப் பொருள் பயன்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விரைவில் அவரை கைது செய்ய டெல்லி போலீசார் தயாராகியுள்ளனர். ஆளும் காங்கிரஸ் கட்சி அமைச்சரின் மகன் பாலியல் சர்ச்சையில் சிக்கியிருப்பது ராஜஸ்தான் மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Source, Image Courtesy: Asianetnews