பிறந்தநாள் கேக்கில் அரசியல் செய்தியை சூசகமாக சொன்ன ரஜினி.!
பிறந்தநாள் கேக்கில் அரசியல் செய்தியை சூசகமாக சொன்ன ரஜினி.!
By : Mohan Raj
நேற்றைய தினம் திரு.ரஜினிகாந்த் அவர்களின் பிறந்தநாளையெட்டி ஏராளாமான ரசிகர்கள், திரையுலக பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு பிரபலங்கள், தொழிலதிபர்கள், பத்திரிக்கையாளர்கள் போன்ற அனைத்து தரப்பினர்களின் வாழ்த்துக்களையும் பெற்றார். இவை அனைத்திற்கும் மேலே பாரத நாட்டின் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் பிரத்யோக வாழ்த்தையும் பெற்றார் திரு.ரஜினிகாந்த். இதனையடுத்து தனது வீட்டில் பிறந்தநாள் கேட் வெட்டினார் இதன் புகைப்படங்களை அவரது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த அவர்கள் வெளியிட்டுள்ளார்.
நேற்று திரு.ரஜினிகாந்த் அவர்கள் வெட்டிய பிறந்நநாள் கேக்'ல் தனது அரசியல் பிரவேச எண்ணத்தையும் வெளிப்படுத்தி இதர எதிர்ப்பு அரசியல்வாதிகளின் வயிற்றில் புளியை கரைத்துள்ளார்.
"Now Or Never" என்ற ஆங்கில வாசகத்துடன் வடிவமைக்கப்பட்டிருந்தது அந்த கேக். அதாவது திரு.ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் வருகையை வெளியுலகத்திற்கு தெரியபடுத்திய பின் அவர் கூறிய வார்த்தைகள் "மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்", "இப்ப இல்லைன்னா எப்போதும் இல்லை" என்ற இரு முதன்மை வாசகங்கள் மட்டுமே. அதாவது தமிழகத்தில் அரசியல் தரமிழந்து, ஆட்சி மற்றும் அதிகாரம் சீர்கேடாகவும் அரசு இயந்திரம் பழுதடைந்தும் போய்விட்டது இதனை மாற்ற வேண்டும் எனவும் இப்ப மாற்ற இயலவில்லை என்றால் பின் எப்போதும் மாற்ற இயலாது என்பதையும் சூசகமாக தெரிவித்திருந்தார்.
இதன் அம்சமான "NOW OR NEVER" என்ற வாசகம்தான் நேற்று அவர் வெட்டிய கேக்'ல் இடம் பெற்ற வாசகமாகும்.ஒரு கேக்கில் அவரை எதிர்த்து அரசியல் செய்ய நினைக்கும் அரசியல்வாதிகளுக்கு பயந்தை திரு.ரஜினிகாந்த் அவர்கள் ஏற்படுத்திவிட்டார்.