தார்மீக சக்தியாக ரஜினி விளங்குவார்.. ப.சிதம்பரம் கருத்து.!
தார்மீக சக்தியாக ரஜினி விளங்குவார்.. ப.சிதம்பரம் கருத்து.!
![தார்மீக சக்தியாக ரஜினி விளங்குவார்.. ப.சிதம்பரம் கருத்து.! தார்மீக சக்தியாக ரஜினி விளங்குவார்.. ப.சிதம்பரம் கருத்து.!](https://kathir.news/static/c1e/client/83509/uploaded/ef5fa695b74e820971e4fc10884a139e.jpg)
ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைபாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்தார். அவரது அறிவிப்புக்கு பலர் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
ரஜினி ஒரு தார்மீக சக்தியாக விளங்குவார் என காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியதாவது: ப.சிதம்பரம், ரஜினியுடன் இணக்கமாகப் பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய அரசியல் ஆவல் உள்ளது. 2021 ஆண்டையும் அதற்குப் பிறகு, 2024ஆம் ஆண்டையும் நான் எதிர்நோக்குகிறேன்.
ரஜினி ஒரு தார்மீக சக்தியாக விளங்கியவர், விளங்குபவர் என்பதில் எனக்கு ஐயமில்லை. 1996ஆம் ஆண்டைப் பல முறை நினைத்துப் பார்த்து நான் மகிழ்ச்சியடைந்து வருகிறேன்.
உடல் நிலையை காரணம் காட்டி கட்சி தொடங்கப்போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ள நிலையில் ப.சிதம்பரம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 1996ம் ஆண்டு ரஜினிகாந்த் அதிமுகவுக்கு எதிராகவும் திமுக கூட்டணிக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்திருந்தார். அன்று திமுக கூட்டணியில் மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் இடம் பெற்றிருந்தது. அப்போது ப.சிதம்பரமும் மூப்பனாரிடம் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.