Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா ஆய்வு கட்டணம் ரூ.800 ஆக குறைக்க ராமதாஸ் கோரிக்கை.!

கொரோனா ஆய்வு கட்டணம் ரூ.800 ஆக குறைக்க ராமதாஸ் கோரிக்கை.!

கொரோனா ஆய்வு கட்டணம் ரூ.800 ஆக குறைக்க ராமதாஸ் கோரிக்கை.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 Dec 2020 6:34 PM GMT

மற்ற மாநிலங்களைப் போன்று கொரோனா ஆய்வு கட்டணத்தை ரூ.800 ஆக குறைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா தொற்றைக் கண்டுபிடிப்பதற்கான ஆர்.டி. பி.சி.ஆர் ஆய்வுக்கு தமிழகத்திலுள்ள தனியார் ஆய்வகங்களில் இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், ரூ.3,000 முதல் ரூ.3,500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.


மற்ற மாநிலங்களின் குறைந்தபட்ச கட்டணத்தை விட 4 மடங்குக்கும் அதிகமான கட்டணத்தை வசூலிக்கப்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிக்கிறது. டெல்லி, ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் தனியார் ஆய்வகங்களில் கொரோனா ஆய்வுக்கு ரூ.1,500 முதல் ரூ.2,400 வரை வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம், கடந்த சில நாட்களுக்கு முன் ரூ.800 ஆக குறைக்கப்பட்டுள்ளது.


ஆந்திரம் மற்றும் கர்நாடகத்தில் ரூ.1,600 மட்டுமே கொரோனா ஆய்வுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அந்த மாநிலங்களில் கொரோனா ஆய்வை அதிகரிக்கச் செய்யும் நோக்கத்துடன் கட்டணக் குறைப்பை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

தமிழ்நாட்டில் மட்டும் தனியார் ஆய்வு மையங்களில் 6 மாதங்களாக அதிகமான கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆய்வுக்கட்டணத்தை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. கொரோனா வைரஸ் தொற்று நோயை முற்றிலுமாக கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. எனவே அரசு ரூ.800 ஆக கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News