Kathir News
Begin typing your search above and press return to search.

'எப்பா நம்ம ஆளுங்க பா.ஜ.க போறாங்க பாரு நிறுத்துங்கப்பா' - டாக்டர்.ராமதாஸ் கட்சியினருக்கு உத்தரவு

பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து பாரதிய ஜனதாவில் இளைஞர்கள் சேர்வதை தடுத்து நிறுத்துங்கள் என ராமதாஸ் தனது கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

எப்பா நம்ம ஆளுங்க பா.ஜ.க போறாங்க பாரு நிறுத்துங்கப்பா - டாக்டர்.ராமதாஸ் கட்சியினருக்கு உத்தரவு
X

Mohan RajBy : Mohan Raj

  |  2 Jun 2022 5:45 PM IST

பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து பாரதிய ஜனதாவில் இளைஞர்கள் சேர்வதை தடுத்து நிறுத்துங்கள் என ராமதாஸ் தனது கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார்.


தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி வளர்ந்து வருவது அனைத்து கட்சியினர் கண்ணையும் உறுத்தி வருகிறது. அறிக்கைகள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என எந்த நேரமும் தேர்தலை எதிர்கொள்ளும் பரபரப்பில் அண்ணாமலை கட்சியை வழிநடத்தி வருகிறார். இதனால் இளைஞர்கள் அதிக அளவில் கட்சியில் சேருவது அதிகமாகி வருகிறது.

இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் பாரதிய ஜனதா கட்சியை கட்டுப்படுத்தவும் தங்கள் கட்சியின் நிர்வாகிகள் அந்தப் பக்கம் செல்வதை தடுக்கவும் பாட்டாளி மக்கள் கட்சி தீவிரம் காட்டி வருகிறது.

சமீபகாலமாக பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து அதிக அளவில் பாஜகவில் செல்வதை விரும்பாத பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் கட்சியினரை தற்போது கடிந்து கொண்டு உள்ளார். இனிமேல் யாரும் பாரதிய ஜனதா பக்கம் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு டாக்டர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து நிர்வாகிகளிடம் அவர் பேசும்போது, 'இட ஒதுக்கீடு பெற்றுத் தந்து தமிழர்கள் உரிமைக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வருவது போன்ற பாமகவின் நிலைப்பாட்டை இளைஞர்கள் மத்தியில் எடுத்துச் செல்லுங்கள்' என அறிவுறுத்தி இருக்கிறார்.


Source - Maalai malar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News