'பா.ஜ.க எதிர்த்து நிற்க முடியலை இதுல பேச்சு வேற' - ராகுலை கிழித்த கம்யூனிஸ்ட் ராமகிருஷ்ணன்
'அதிகாரத்திற்காக பா.ஜ.க'வின் குரலில் பேச தயங்காத காங்கிரஸ் கட்சியின் பரிதாப நிலையை இது காட்டுகிறது' என ராகுல் காந்தியை கம்யூனிஸ்ட் கட்சியின் ராமகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

By : Mohan Raj
'அதிகாரத்திற்காக பா.ஜ.க'வின் குரலில் பேச தயங்காத காங்கிரஸ் கட்சியின் பரிதாப நிலையை இது காட்டுகிறது' என ராகுல் காந்தியை கம்யூனிஸ்ட் கட்சியின் ராமகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
சமீபத்தில் வயநாட்டில் உள்ள ராகுல் எம்.பி தொகுதி அலுவலகத்தை மார்க்லிஸ்ட் மாணவர் அமைப்பினர் அடித்து நொறுக்கினர் அதனை தொடர்ந்து வயநாடு வந்த ராகுல் கேரள கம்யூனிஸ்ட் அரசியல் கடுமையாக விமர்சித்தார்.
அதற்கு பதிலடியாக ராமகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'பா.ஜ.க'வில் ஒரு தொகுதியை கூட வெல்ல முடியாத அளவிற்கு கேரளாவுக்கு சென்ற ராகுல் பா.ஜ.க'வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தொடர்பு உள்ளதாக பேசியிருப்பது வினோதம்.
எதிர்க்கட்சி ஆளும் மாநிலமான கேரள முதல்வர் மீது அமலாக்க துறையை ஏவ வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளதை குறிப்பிட்டவர் அதிகாரத்திற்காக பா.ஜ.க'வின் குரலில் பேச தயங்காத காங்கிரஸ் கட்சியின் பரிதாப நிலையை காட்டுகிறது என கூறியுள்ளார்.