"ராமேசுவரம் தீர்த்த கிணறுகளை திறக்க வேண்டும்" அரசுக்கு எடுத்து கூறிய பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ! இன்று முதல் பக்தர்கள் நீராட அனுமதி!
ராமேசுவரம் கோவில் தீர்த்த கிணறுகளில் இன்று பக்தர்கள் முதல் புனித நீராட அனுமதி அளித்து தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதை பாஜக வரவேற்பு அளித்துள்ளது.
By : Thangavelu
ராமேசுவரம் கோவில் தீர்த்த கிணறுகளில் இன்று பக்தர்கள் முதல் புனித நீராட அனுமதி அளித்து தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதை பாஜக வரவேற்பு அளித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள் மிகவும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 6 மாதத்திற்கு மேலாக தீர்த்த கிணறுகள் மூடப்பட்டுள்ளதால் தீர்த்த கிணறுகளை நம்பி 400க்கும் மேற்பட்ட யாத்திரை பணியாளர்கள் வருமானமின்றி வாழ்வதாரம் இழந்து தவித்து வந்தனர். உடனடியாக தீர்த்த கிணறை திறக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று அளித்த பேட்டியில் திமுக அரசுக்கு அழுத்தம் கொடுத்தார். அது மட்டுமின்றி ஒயின்ஷாப் மற்றும் பார்கள் திறக்கப்பட்டுள்ளது. அங்கு எல்லாம் கொரோனா பரவாது ஆனால் தீர்த்த கிணறுகளில் மட்டும் பரவுமா என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகள் இன்று முதல் (நவம்பர் 1) திறக்கப்பட்டு பக்தர்கள் புனித நீராட அனுமதி அளித்து திமுக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 6 மாதத்திற்கு மேலாக திறக்கப்படாமல் இருந்த தீர்த்த கிணறு இன்று முதல் திறக்கப்படுவதால் பக்தர்கள் மட்டுமின்றி அதனை நம்பியுள்ளவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Source, Image Courtesy: Twiter
https://fb.watch/8_-J5f2mIR/