Kathir News
Begin typing your search above and press return to search.

பகுதி நேர ஆசிரியர்களுக்கு போனஸ்: தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை!

தமிழக அரசு பள்ளிகளில் மிகக்குறைந்த சம்பளத்துடன் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் தீபாவளி திருநாளை கொண்டாட பொருளாதாரம் இல்லாமல் தவிக்கின்றனர் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பகுதி நேர ஆசிரியர்களுக்கு போனஸ்: தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை!
X

ThangaveluBy : Thangavelu

  |  1 Nov 2021 7:03 AM GMT

தமிழக அரசு பள்ளிகளில் மிகக்குறைந்த சம்பளத்துடன் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் தீபாவளி திருநாளை கொண்டாட பொருளாதாரம் இல்லாமல் தவிக்கின்றனர் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: தமிழக அரசு பள்ளிகளில் மிகக்குறைந்த ஊதியத்துக்கு பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் தீப ஒளி திருநாள் கொண்டாட பொருளாதாரம் இல்லாமல் தவிக்கின்றனர். அவர்களுக்கு தீப ஒளி திருநாளை மகிழ்ச்சியானதாக மாற்ற வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. பகுதி நேர ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.10,000 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. மே மாதத்துக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை. அவர்களுக்கு பல ஆண்டுகளாக பணி நிலைப்பு வழங்கப்படவில்லை. போனஸ், கருணைத் தொகை எதுவும் வழங்கப்படுவதில்லை.

மேலும், தமிழகத்தில் 12,000 பகுதி நேர ஆசிரியர்கள் உள்ள நிலையில் அவர்களுக்கு கருணைக் தொகை, முன்பணம் வழங்க அதிக செலவாகாது. ஆனால், அது அவர்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி அளிக்கும். எனவே, அவர்களுக்கு அரசு கருணைக்தொகை, முன்பணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News