Kathir News
Begin typing your search above and press return to search.

கச்சத்தீவுக்கு விசா இல்லாமல் செல்ல புதிய ஏற்பாடு! - அண்ணாமலை அதிரடி திட்டம்

கச்சத்தீவுக்கு விசா இல்லாமல் செல்ல புதிய ஏற்பாடு! - அண்ணாமலை அதிரடி திட்டம்

ThangaveluBy : Thangavelu

  |  5 May 2022 2:15 PM GMT

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 30ம் தேதி இலங்கைக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு தமிழர்கள் வாழும் பகுதிகளில் நடைபெற்ற மே தின பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அதன் பின்னர் பொருளாதார நெருக்கடியால் வாழ்வை இழந்தவர்களுக்கு தேவையான நிதியுதவிகளை மத்திய பா.ஜ.க. அரசு வழங்கும் என்று கூறினார்.

இந்நிலையில், இலங்கை பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய அண்ணாலை நேற்று செய்தியாளர்களை சந்தித்து பயணம் தொடர்பாக விளக்கினார். அதாவது கடந்த 4 நாட்களாக இலங்கை மலையகத் தமிழர்களை சந்திக்கின்ற வாய்ப்பு கிடைத்தது. இலங்கை அதிபருக்கு என்ன மரியாதை கொடுக்கின்றனரோ அதே மரியாதையை நமது பாரத பிரதமர் மோடிக்கும் மக்கள் அளிக்கின்றனர். கடந்த ஏழு மாதங்களில் மட்டும் இந்தியா, இலங்கைக்கு ரூ.11 ஆயிரம் கோடி மதிப்பிலான உணவுப்பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கியுள்ளது.

மேலும், இலங்கை சென்றபோது, கச்சத்தீவில் இருக்கும் அந்தோணியார் ஆலயத்துக்கு செல்கின்ற தமிழக மக்கள் அனுமதிச் சீட்டு இல்லாமல் செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டும். இலங்கை எல்லையை தமிழக மீனவர்கள் மீறுகின்றனர் என்று அவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையை தவிர்த்து மனிதாபிமான முறையில் நடந்து கொள்ள வேண்டும். அதே சமயம் தமிழர்களின் படகுளை மீட்பதற்கு அந்நாட்டு அரசியல் கட்சிகளின் கவனத்துக்கு கொன்று சென்றுள்ளேன். அவர்கள் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Source, Image Courtesy: Hindu Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News