நேற்று கட்சியில் இருந்து ராஜினிமா.. இன்று மீண்டும் முடிவை மாற்றிக்கொண்ட பா.ஜ.க., எம்.பி.!
நேற்று கட்சியில் இருந்து ராஜினிமா.. இன்று மீண்டும் முடிவை மாற்றிக்கொண்ட பா.ஜ.க., எம்.பி.!
By : Kathir Webdesk
அரசியலில் எதுவுமே நிரந்தரம் இல்லை என்பது பொருள் உண்டு. அதாவது பகைவரும் நண்பர்களாவர்கள், நண்பர்களும் பகைவர்களாவார்கள். இது தான் தற்போதையை அரசியல் கணக்காக உள்ளது.
அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்திற்கு (29/12/2020) முன்னதாக கட்சியிலிருந்து விலகுவதாக சொல்லி ராஜினாமா செய்த பாஜக மக்களவை உறுப்பினர் அந்த முடிவை திரும்ப பெற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் சுமார் 121 கிராமங்களை உள்ளடக்கிய, ஷூல்பனேஷ்வர் வனவிலங்கு சரணாலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை ‘சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம்’ என்று அறிவிக்கும் அறிவிப்பை திரும்பப் பெறுமாறு பழங்குடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இது தொடர்பாக விவசாயிகள் மற்றும் உள்ளூர் மக்களின் நலன்கருதி கடந்த வாரம் மக்களவை தொகுதி எம்.பி., மன்சுக் வாசவா பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
மன்சுக் வாசவா “பட்ஜெட் அமர்வின்போது சபாநாயகரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தைக் கொடுத்து விடுகிறேன் என சொல்லி கட்சியிலிருந்து தான் விலக உள்ள முடிவை அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று அவரது ராஜினாமா முடிவிலிருந்து யூ டென் எடுத்துள்ளார் அவர். எனக்கு அரசுடனும், கட்சியுடனும் எந்த சிக்கலும் இல்லை. எனது உடல் நிலையினாலேயே நான் விலக நினைத்தேன். இருப்பினும் நான் மக்களவை உறுப்பினராக தொடர வேண்டும் என கட்சியினர் அன்போடு சொன்னதால் எனது ராஜினாமா முடிவை பின்வாங்கி கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இவரது முடிவிற்கு பாஜக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.