Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க. வழங்கிய பொங்கல் தொகுப்பில் ரூ.1,000 கோடி ஊழல்: ஹெச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

தி.மு.க. வழங்கிய பொங்கல் தொகுப்பில் ரூ.1,000 கோடி ஊழல்: ஹெச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!
X

ThangaveluBy : Thangavelu

  |  21 Jan 2022 6:32 AM GMT

திமுக அரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1,000 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் செய்துள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

திமுக அரசு பொங்கலை முன்னிட்டு 21 வகையிலான பொருட்களை வெளிமாநில சந்தையில் வாங்கி ரேஷன் கடையில் விநியோகம் செய்தது. இதில் பொருட்கள் தரமில்லை என்று பல மாவட்டங்களில் பொதுமக்கள் சாலைகளில் வீசி தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். இதனிடையே திமுக அரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பில் தரம் இல்லை என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா, கடந்த அதிமுக ஆட்சியின்போது ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ.2,500 வழங்கப்பட்டது. அதனை 5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருந்தார். ஆனால் தற்போது ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் விதமாக ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை. அவர் மீது பொதுமக்கள் கடும் கோபத்தில் உள்ளனர் என்றார்.

மேலும், வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் பொங்கல் பரிசு தொகுப்பில் பொதுமக்களை ஏமாற்றியதற்காக அவருக்கு தக்க பாடத்தை புகட்டுவார்கள். அது மட்டுமின்றி பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1000 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளது. தரமற்ற பொருட்களை வாங்கி இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை தேவை எனக் கூறினார்.

Source: News 7 Tamil

Image Courtesy: The Hindu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News