Begin typing your search above and press return to search.
திருநெல்வேலியில் மாயமான வாக்குப் பெட்டியின் சாவி!
தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

By :
தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் தபால் வாக்குப் பெட்டியின் சாவி தொலைந்தது. இதனையடுத்து சுத்தியின் மூலமாக வாக்குப்பெட்டியின் பூட்டு உடைக்கப்பட்டு தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
அதே போன்று பரமக்குடியில் வாக்கு எண்ணிக்கையின்போது, வாக்கு பெட்டியின் சாவி மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு சுத்தியல் மூலமாக வாக்குப் பெட்டியின் பூட்டு உடைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Source, Image Courtesy: Dailythanthi
Next Story