பிரதமர் மோடி, ராமதாஸ் குறித்து பேஸ்புக்கில் அவதூறு: காவல்நிலையத்தில் புகார் அளித்த பா.ம.க., பா.ஜ.க., நிர்வாகிகள்.!
சேலம் மாவட்டம், மேட்டூரை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் கடந்த சில ஆண்டுகளாகவே, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் எம்.பி., பாஜக தலைவர்கள் மற்றும் பிரதமர் மோடி குறித்தும் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளார்.

இதனை தொடர்ந்து மேட்டூர் தொகுதி பாமக எம்.எல்.ஏ., சதாசிவம், பாமக மேற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகர் தலைமையில் ஏராளமான பாமகவினர் சதீஷ்குமாரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி மேட்டூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசனிடம் புகார் அளித்துள்ளனர்.
மேலும், பாஜக மாவட்ட பொறுப்பாளர் சுரேஷ் வேலுவும் சதீஷ்குமாரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என புகார் அளித்துள்ளார். உடனடியாக சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய வேண்டும். அதுவரை காவல் நிலையத்திலேயே காத்திருப்பு போராட்டம் நடத்துவதாக எம்.எல்.ஏ., தனது ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் பதறிப்போன காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்வதாக உறுதி அளித்துள்ளனர். இதன் பின்னரே அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் சமூக வலைதளங்களில் எதிர்க்கட்சித் தலைவர்கள் குறித்து அவதூறாக மட்டுமின்றி மிகவும் ஆபாசமான வார்த்தைகளாலும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இது போன்றவர்களுக்கு திமுக அரசு ஆதரவு அளிப்பது வெட்கக்கேடானது என பாமக மற்றும் பாஜக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.