அதே குழந்தை.. அப்பாவும், மகனும் மாத்தி மாத்தி நடிக்கிறதா இருக்கு.!
அதே குழந்தை.. அப்பாவும், மகனும் மாத்தி மாத்தி நடிக்கிறதா இருக்கு.!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாரத்தில் மூன்று நாட்கள் காலை நேரத்தில் சென்னை புறநகர் பகுதிகளில் சைக்கிளில் சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து உடற்பயிற்சி மேற்கொள்வதாக கடந்த சில வாரங்களாக பத்திரிகைகளில் பார்க்க முடிகிறது.
சைக்கிளில் செல்வதற்கு முன்பாக இரண்டு சிறுவர்களை காரில் ஏற்றிக்கொண்டு பாதி வழியில் விடுவது. பின்னர் ஸ்டாலின் எதார்த்தமாக அந்த வழியில் வரும்பொழுது அந்த சிறுவர்கள் ஸ்டாலினுக்கு கை கொடுப்பார்கள். இதனை அவரது பாதுகாவலர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள். பின்னர் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிக்கு அதனை கொடுத்து வெளியிட சொல்வார்கள். இதற்கு நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனங்களும் வைப்பது உண்டு.
இந்நிலையில், 100 நாள் பிரச்சாரம் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருவாரூர், நாகை, தஞ்சாவூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அந்த சமயத்தில் ஏழைகளுடன் புகைப்படம் எடுப்பது மற்றும் அவர்களின் வீடுகளுக்கு செல்வதை தனது தந்தையை போன்று நாடகம் செய்வதில் வல்லவராக உள்ளார்.
அதே போன்று சென்னையில், ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக்கொண்ட அதே சிறுவனுடன் உதயநிதியும் புகைப்படம் எடுத்துள்ளார். அதாவது காரில் எதார்த்தமாக வருகிறார். அந்த சிறுவன் சைக்கிளில் இருந்து கார் அருகே செல்கிறார். அப்போது உதயநிதி சிறுவனின் கன்னத்தை தொடுகிறார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அதே நடிகர் வித்தியாசமான ஜோக்கர்கள் என நெட்டிசன்கள் விமர்சனங்களை வைக்கின்றனர். மேலும், விளம்பரங்களில் நடிப்பது தந்தையை ஓவர்டேக் செய்து விடுவார் உதயநிதி எனவும் விமர்சனங்களை பார்க்க முடிகிறது.