Kathir News
Begin typing your search above and press return to search.

சசிகலா வரவேற்பு: கிருஷ்ணகிரியில் 2 கார் தீர்ப்பிடித்து எரிந்து நாசம்.. அதிர்ச்சியில் அமமுகவினர்.!

சசிகலா வரவேற்பு: கிருஷ்ணகிரியில் 2 கார் தீர்ப்பிடித்து எரிந்து நாசம்.. அதிர்ச்சியில் அமமுகவினர்.!

சசிகலா வரவேற்பு: கிருஷ்ணகிரியில் 2 கார் தீர்ப்பிடித்து எரிந்து நாசம்.. அதிர்ச்சியில் அமமுகவினர்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  8 Feb 2021 12:33 PM GMT

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையான சசிகலா பெங்களூருவில் இருந்து தமிழகம் நோக்கி சென்று கொண்டிருக்கின்றார். அவருக்கு தமிழக எல்லையான ஓசூரில் அமமுகவினர் வரவேற்பு அளித்தனர்.

இதனையடுத்து சசிகலா பயன்படுத்திய காரில் இருந்து அதிமுக கொடியை போலீசார் அகற்றினர். இதனை தொடர்ந்து ஓசூரில் இருந்து கார் கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது 2 கார்கள் தீப்பிடித்து எரிந்து நாசமானது.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் காரில் பட்டாசுகளுடன் பயணம் செய்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தால் தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. தீப்பிடித்த எரிந்த காரை அணைக்கும் முயற்சியில் தீயணைப்புத்துறையினர் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story