சசிகலா உடல்நல பாதிப்பு! மனித உரிமைகள் ஆணையத்தில் முறையீடு!
சசிகலா உடல்நல பாதிப்பு! மனித உரிமைகள் ஆணையத்தில் முறையீடு!
By : Kathir Webdesk
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று வரும் சசிகலாவிற்கு திடீரென்று உடல்நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் நலம் பற்றி சந்தேகம் இருப்பதாக மனித உரிமைகள் ஆணையத்தில் சசிகலாவின் வழக்கறிஞர் புகார் தெரிவித்துள்ளார்.
4 ஆண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோரும் சிறை தண்டனை பெற்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை முதல் சசிகலாவிற்கு காய்ச்சல் இருந்துள்ளது.
அவருக்கு சிறையிலேயே மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு அரசு மருத்துவமனையா பவுரிங்கில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முதற்கட்டமாக ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதன் பின்னர் சசிகலாவின் உறவினர்கள் அனைவரும் மருத்துவமனை முன்பு குவிந்தனர். திவாகரன் உள்ளிட்டோர் சசிகலாவை பார்ப்பதற்காக செல்ல முற்பட்டபோது அவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை.
இந்நிலையில், சசிகலா உடல் நல பாதிப்பு சந்தேகம் உள்ளதாக அவரது வழக்கறிஞர் ராஜராஜன் புகார் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக கர்நாடக மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கறிஞர் புகார் கூறியுள்ளார். விடுதலையாக சில நாட்களே உள்ள நிலையில், சசிகலா உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சந்தேகம் உள்ளது எனவும் கூறியுள்ளார்.