அ.தி.மு.க.,வை நிராகரிக்க பள்ளி சிறுவர்கள்.. தி.மு.க.வின் போலி கிராம சபை கூட்டத்தின் அவலம்.!
அ.தி.மு.க.,வை நிராகரிக்க பள்ளி சிறுவர்கள்.. தி.மு.க.வின் போலி கிராம சபை கூட்டத்தின் அவலம்.!

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கும் இடையில் சட்டப்பேரவை தேர்தலுக்கான அரசியல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுக சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த மாவட்டமான சேலத்தில் இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். அதன் பின்னர் நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் அதிமுக சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், திமுக சார்பில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கிராம சபைக்கூட்டம் என்று தொடங்கி வைத்துள்ளார். அந்த கிராம சபைக்கூட்டத்தில் பள்ளிக்சிறுவர்களை வைத்து கையெழுத்திட்டு வருகின்றனர்.
இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது. அதிமுக நிராகரிக்க சிறுவர்களை வைத்து அரசியல் நடத்தும் அளவிற்கு திமுக சென்றுவிட்டதே என அக்கட்சியில் உள்ள சீனியர்களே புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.