Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க.வினரின் அராஜக போக்கை கண்டித்து அறிக்கை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி: நன்றி தெரிவித்த சீமான்!

தருமபுரி மாவட்டம், மொரப்பூரில் நாம் தமிழர் கட்சியினர் மீது நடத்திய திமுகவினரின் அராஜக போக்கை கண்டித்து அறிக்கை வெளியிட்ட அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார்.

தி.மு.க.வினரின் அராஜக போக்கை கண்டித்து அறிக்கை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி:  நன்றி தெரிவித்த சீமான்!

ThangaveluBy : Thangavelu

  |  24 Dec 2021 8:19 AM GMT

தருமபுரி மாவட்டம், மொரப்பூரில் நாம் தமிழர் கட்சியினர் மீது நடத்திய திமுகவினரின் அராஜக போக்கை கண்டித்து அறிக்கை வெளியிட்ட அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தருமபுரி மாவட்டம் மொரப்பூர் பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் சிறுபான்மையின் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு திமுக அரசு பற்றி பேசினர். இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர் மேடையில் ஏறி தாக்குதல் நடத்தினர். அது மட்டுமின்றி மேடையில் இருந்த மைக்கை கீழே தள்ளிவிட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக வீடியோ வெளியாகி தமிழக அரசியல் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து திமுகவுக்கு எதிராக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கின்ற வகையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "தர்மபுரி மாவட்டம், மொரப்பூரில் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலைகோரிய ஆர்ப்பாட்டத்தில், அத்துமீறி நுழைந்து கொலைவெறித்தாக்குதல் நடத்திய திமுக குண்டர்கள் மீதும், வேடிக்கைப் பார்த்த காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரியும், அதிகாரத் திமிரில் சனநாயக மரபுகளைக் குழிதோண்டிப் புதைத்து ஆணவத்தோடு செயல்படும் திமுகவினரின் அட்டூழியத்தைக் கண்டித்துமென அறிக்கை வெளியிட்ட சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு எனது அன்பு கலந்த நன்றியும், வணக்கமும்! என்று குறிப்பிட்டுள்ளார்.

Source: Twiter

Image Courtesy:Samayam

Next Story
கதிர் தொகுப்பு
Trending News