Begin typing your search above and press return to search.
நான் கும்புடுற அய்யப்பன் மேல சத்தியம்'ங்க நம்புங்க - அழாத குறையாக சத்தியம் செய்யும் 'செயல்பாபு' !

By :
ஐயப்பன் மீது சத்தியமாக கோயில் நகைகளை உருக்குவதில் முறைகேடு நிகழாது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு தெய்வ வழிபாட்டுக்கு தேவைப்படாத நகைகள் மற்றும் உடைந்த நகைகளை மத்திய அரசுக்கு சொந்தமான தங்க உருக்காலைக்கு அனுப்பி வைத்து தங்கக்கட்டிகளாக உருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
இதற்கு பல தரப்புகளில் இருந்தும் "ஊழலுக்கு பெயர் போன தி.மு.க, எப்படி கோவில் நகைகளில் கை வைக்கலாம்?" என எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் அதனை விளக்கும் விதமாக "கோயில் நகைகளை உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்றும் விவகாரத்தில் இம்மியளவு கூட தவறு நிகழாது என்றும் இது தான் வணங்கும் ஐயப்பன் மீது சத்தியம்" எனவும் உறுதியிட்டுள்ளார் அமைச்சர் சேகர்பாபு.
Next Story