முககவசம் போட்டு காண்பிப்பதை நிறுத்திவிட்டு தடுப்பூசி பணிகளில் ஸ்டாலின் கவனம் செலுத்தலாம்.. செல்லூர் ராஜூ.!
மதுரை அரசு மருத்துவனையில் கொரோனா தொற்றால் உயிரிழக்கும் நபர்களுக்கு சான்றிதழ் வழங்குவதில் முறைகேடு நடக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குற்றச்சாட்டியுள்ளார்.
By : Thangavelu
மதுரை அரசு மருத்துவனையில் கொரோனா தொற்றால் உயிரிழக்கும் நபர்களுக்கு சான்றிதழ் வழங்குவதில் முறைகேடு நடக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குற்றச்சாட்டியுள்ளார்.
இது பற்றி மதுரையில் செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், மதுரையில் மிகவும் அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது. தடுப்பூசி போடுவதற்கு மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால் தடுப்பூசி எப்போ வரும் என்று அரசுக்கே தெரியாமல் இருக்கிறது. தடுப்பூசி கறித்து சரியான விபரங்களை வெளியிடவில்லை.
மேலும், முககவம் எப்படி போடுவது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காண்பித்து வருகிறார். அது அனைவருக்கும் தெரியும். தடுப்பூசி வாங்குவதில் சாணக்கியமாக பேச வேண்டும். அதனைதான் பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.
கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களுக்கு பிரதமர் மோடி ரூ.10 லட்சம் அறிவித்துள்ளார். ஆனால் தமிழக முதலமைச்சர் ரூ.5 லட்சம் கொடுக்கிறார். அதிமுக ஆட்சியில் ஒரு கோடி நிவாரணம் கொடுக்க சொன்ன ஸ்டாலின இப்போது மட்டும் ரூ.5 லட்சம் கொடுப்பது ஏன்? அது மட்டுமின்றி மதுரையில் கொரோனா தொற்றால் இறப்பவர்களுக்கு சரியான சான்றிதழ் வழங்குவதில் முறைகேடு நடைபெறுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.