100 நாள் சுற்றுப்பயணத்தை பாதியில் விட்டுவிட்டு சினிமா சூட்டிங் கிளம்பிய உதயநிதி - கடுப்பில் சீனியர்கள்.!
100 நாள் சுற்றுப்பயணத்தை பாதியில் விட்டுவிட்டு சினிமா சூட்டிங் கிளம்பிய உதயநிதி - கடுப்பில் சீனியர்கள்.!
By : Mohan Raj
திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின் மகனும் இளைஞரணி செயலாளருமாகிய உதயநிதி கடந்த பத்து நாட்கள் முன்பு தமிழகத்தில் 100 நாள் தேர்தல் பரப்புரை செய்வதாக திட்டமிட்டு கிளம்பினார்.
முதலில் திருவாரூர் மாவட்டத்தில் துவங்கிய பரப்புரை பின் டெல்டா மாவட்டங்களை முடித்து தமிழகத்தின் பிற பகுதிகளை 100 நாட்களில் வலம் வருவதாக திட்டம். இந்த திட்டமானது வரும் 2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பரப்புரையின் துவக்கமாக இருக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டது.
ஆனால் 100 நாட்களை முடிக்கும் முன்னரே இயக்குனர் திரு.மகிழ் திருமேனி இயக்கத்தில் திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தமாகி உள்ளதால் படப்பிடிப்பிற்காக இவர் 100 நாள் சுற்றுப்பயண திட்டத்தை முடித்துக்கொண்டு சினிமா படப்பிடிப்பிற்கு கிளம்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் பணி, மக்கள் தொடர்பு என சூடாக துவங்கிய சுற்றுப்பயணம் சினிமா சூட்டிங்'கினால் பாதியில் நின்றதால் உடன்பிறப்புகளே நகைக்கும் அளவிற்கு போய்விட்டது.