கர்நாடக சட்டபேரவையின் மேல்சபைக் கூட்டம் நேற்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்த சமயத்தில் காங்கிரஸ் உறுப்பினர் பிரகாஷ் ராதோட் என்பவர் தனது செல்போனில் ஆபாச படங்களை பார்த்து வந்துள்ளார். இந்த காட்சிகளை தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் கன்னட செய்தி சேனல்களில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.
சட்டமன்றத்தில் ஒரு உறுப்பினர் நடந்து கொள்வது சரிதானா என பாஜக மகளிர் அமைப்பினர் மட்டுமின்றி பொதுமக்களும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இது பற்றி பிரகாஷ் ராதோட் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், எனது செல்போனில் ஏராளமான வீடியோக்கள் உள்ளன. அதனை நீக்கிக்கொண்டிருந்தேன். இதை தான் படம் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என தவறான தகவல்களை பரப்பிவிட்டனர்.
மேலும் எனது கேள்விக்கு செல்போனில் டிஜிட்டல் பதில் வந்தது. அதனைதான் படித்தேன். அப்படி நான் வீடியோ பார்த்திருந்தேன் என்றால் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என கூறினார். இவர் அளித்துள்ள பதிலிலே தெரிகிறது. ஆபாச வீடியோக்கள் நிறைய அவரது செல்போனில் வைத்துள்ளார். இதனைதான் அவர் நீக்கி கொண்டிருக்கின்றார் என கன்னட மக்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஒரு சட்டமன்றம் என்பது மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்கின்ற மிகப்பெரிய ஒரு கோயில் ஆகும். அந்த இடத்தில் இது போன்று நடந்து கொள்வது ஏற்க்கத்தக்க அல்ல.