"கொஞ்சம் அவகாசம் குடுங்கய்யா" - சட்டவிரோத பணப் பறிமாற்ற வழக்கில் அவகாசம் கேட்ட செந்தில்பாலாஜி !
செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அமலாக்கத்துறையின் முன் சம்மன் அடிப்படையில் ஆஜராவதற்கு ஒரு மாத காலம் விலக்கு அளிக்க வேண்டும் என்று மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கடிதம் எழுதி அவகாசம் கேட்டுள்ளார்.
அ.தி.மு.க அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த பொழுது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக செந்தில் பாலாஜி, பலரிடமும் பணமோசடியில் ஈடுபட்டதாக அவரின் மீது வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் மின்சாரத்துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனைதொடர்ந்து, மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று விசாரணைக்காக ஆஜராகும்படி அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் செந்தில்பாலாஜி இன்று ஆஜராகவில்லை.
இந்த வழக்கின் சம்மன் அடிப்படையில் ஆஜராவதற்கு ஒரு மாத காலம் விலக்கு அளிக்க வேண்டும் என்று மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று கடிதம் அனுப்பியுள்ளார்.