Kathir News
Begin typing your search above and press return to search.

ராமலிங்கம் படுகொலை போன்று யாருக்கும் வரக்கூடாது.. இந்து இயக்க தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க சிவசேனா கோரிக்கை.!

ராமலிங்கம் படுகொலை போன்று யாருக்கும் வரக்கூடாது.. இந்து இயக்க தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க சிவசேனா கோரிக்கை.!

ராமலிங்கம் படுகொலை போன்று யாருக்கும் வரக்கூடாது.. இந்து இயக்க தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க சிவசேனா கோரிக்கை.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 Feb 2021 9:59 AM GMT

பாமகவை சேர்ந்த திருபுவனம் ராமலிங்கம் படுகொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த படுகொலையை நிகழ்த்திய முஸ்லீம் பயங்கரவாத கும்பலை போலீசார் கைது செய்தனர். இதன் பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகின்றது. இதில் தொடர்புடையவர்கள் மதவாத கும்பல் எனவும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், சிவசேனா கட்சி மற்றும் இந்து மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சிவசேனா கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் இந்து மக்கள் கட்சி நகர தலைவர் பிரதீப் தலைமையில், சிவசேனா மாவட்ட தலைவர் செந்தில், இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் முன்னிலையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் முஸ்லீம் கும்பலால் படுகொலை செய்யப்பட்ட திருபுவனம் பாமக பிரமுகர் ராமலிங்கத்தின் உருவபடத்திற்கு அஞ்சலி செலுத்தினர். இதன் பின்னர் இதில் கலந்துகொண்டு பேசிய சிவசேனா கட்சி மாநில செயலாளர் சுந்தர வடிவேலன், மத பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட திருபுவனம் ராமலிங்கத்தின் குடும்பத்தில் ஒருவருக்கு தமிழக அரசு உடனே அரசு வேலை வழங்க வேண்டும். திருபுவனம் பேருந்து நிலையத்திற்கு ராமலிங்கத்தின் பெயர் சூட்ட வேண்டும்.

மேலும், தமிழகத்தில் உள்ள இந்து இயக்க தலைவர்கள் அனைவருக்கும் காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இந்து இயக்க தலைவர்கள் மத பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு வருகின்றனர். அவர்களின் வாகனங்கள் மறிக்கப்படும் சம்பவங்கள் நிகழ்ந்து வருவது கண்டனத்துக்குரியது. இது போன்ற செயல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சரை கேட்டுக் கொண்டார்.
இந்த கூட்டத்தில் சிவசேனா மற்றும் இந்து மக்கள் கட்சியை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News