காங்கிரஸ் கூட்டணி மீது சிவசேனா திடீர் அதிருப்தி.!
காங்கிரஸ் கூட்டணி மீது சிவசேனா திடீர் அதிருப்தி.!
![காங்கிரஸ் கூட்டணி மீது சிவசேனா திடீர் அதிருப்தி.! காங்கிரஸ் கூட்டணி மீது சிவசேனா திடீர் அதிருப்தி.!](https://kathir.news/static/c1e/client/83509/uploaded/50ac525e1c20e89afada5051cfd6af10.jpg)
காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி ஒற்றுமை மற்றும் வலிமையை இழந்துவிட்டது. எனவே பா.ஜ.கவுக்கு எதிரான கட்சிகள் அனைத்தும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் ஒன்றிணைய வேண்டும் என சிவசேனா வலியுறுத்தியுள்ளது.
பா.ஜ.க., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீண்டகாலம் இருந்த உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் உடன் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது.
சிவசேனாவின் அக்கட்சியின் பத்திரிகையான, ‘சாம்னா’வில் எழுதப்பட்டுள்ள கட்டுரையில் கூறப்பட்டிருப்பதாவது, விவசாயிகள் நாட்டின் தலைநகர் எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், மத்திய அரசு, அவர்களது கோரிக்கைகளை ஏற்க மறுத்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் காங்கிரஸ் கூட்டணியில் ஒற்றுமையில்லாத, பலம் குறைந்த எதிர்க்கட்சியே காரணம். நாட்டில் எதிர்க்கட்சிகள் தனித்தனியாக இருப்பது ஜனநாயகத்தின் பலத்தை குறைத்துவிடும்.
தற்போது, காங்கிரஸ் தலைமையிலான, ஐ.மு., கூட்டணி, ஓர் அரசு சாரா அமைப்பு போல் தான் உள்ளது. கூட்டணியில் உள்ள சில கட்சிகள், விவசாயிகளின் போராட்டத்துக்கு முக்கியத்துவம் தரவில்லை. கூட்டணிக் கட்சிகளிடையே கருத்து வேறுபாடுகள் அதிகம் உள்ளன. ராகுல் வலுவாக போராடுகிறார். ஆனால் அவருடைய கட்சியிலேயே பிரச்னை அதிகம் உள்ளது என அப்பத்திரிகை கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.