Kathir News
Begin typing your search above and press return to search.

'ஐயா என் நிலத்த உதயநிதி அழைச்சுட்டு வந்து செங்கல் வச்சு பூஜை போட்டு ஆக்கிரமிச்சுட்டாங்க!' - திமுகவிடம் நிலத்தை பறிகொடுத்த அப்பாவி கதறல்

'ஐயா என் நிலத்தை அபகரிச்சது மட்டும் இல்லாம உதயநிதியை வைத்து பூஜை போட்டாங்க ஐயா' என திமுக மீது மேலும் ஒரு நில அபகரிப்பு புகார் எழுந்துள்ளது.

ஐயா என் நிலத்த உதயநிதி அழைச்சுட்டு வந்து செங்கல் வச்சு பூஜை போட்டு ஆக்கிரமிச்சுட்டாங்க! - திமுகவிடம் நிலத்தை பறிகொடுத்த அப்பாவி கதறல்

Mohan RajBy : Mohan Raj

  |  30 Jan 2023 2:53 AM GMT

'ஐயா என் நிலத்தை அபகரிச்சது மட்டும் இல்லாம உதயநிதியை வைத்து பூஜை போட்டாங்க ஐயா' என திமுக மீது மேலும் ஒரு நில அபகரிப்பு புகார் எழுந்துள்ளது.

திமுக என்றாலே நில அபகரிப்பு புகார் அப்படின்னு ஆகிவிட்டது, 'நில அபகரிப்பு சட்டம்' என்ற ஒரு சட்டமே உருவாக காரணமாக இருந்த வரலாற்று சிறப்புமிக்க கட்சி திமுக. கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை ஐந்தாண்டு ஆட்சி செய்த திமுக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நிலங்கள், கட்டிடங்கள், விவசாய நிலங்கள் போன்றவற்றை உரிமையாளர்களிடம் மிரட்டி எழுதி வாங்கிய அக்கிரமத்தை பொதுமக்கள் 2011 இல் புதிதாக ஜெயலலிதா அம்மையார் முதலமைச்சர் ஆனவுடன் புகார்களாக குவித்தார்கள்.

மக்களின் கஷ்டத்தை புரிந்து கொண்ட முன்னாள் முதல்வர் மறைந்த செல்வி ஜெயலலிதா அவர்கள் நில அபகரிப்புச் சட்டம் என்ற ஒன்றை உருவாக்கினார்கள். அதன்படி திமுகவினரால் பொதுமக்களிடையே மிரட்டி வாங்கப்பட்ட இடம் மற்றும் கட்டிடங்கள் பொதுமக்கள் யாரேனும் புகார் கொடுத்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதால் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பொதுமக்கள் புகார் மேல் புகார் தெரிவித்து வந்தனர்.

இதனால் பல திமுகவினர் பொதுமக்கள் அப்பாவி பொதுமக்களின் நிலங்களை அடித்துப் பிடிங்குயதும், மிரட்டி பிடுங்கியதும், உயிர் பயத்தை காட்டி பிடுங்கியதும், பணத்தை காட்டி எழுதி வாங்கியதும் தெரிய வந்தது இதனால் தமிழகமே அதிர்ச்சிக்கு உள்ளானது. இப்படி வரலாறு கொண்ட திமுக மீது மீண்டும் தற்பொழுது ஒரு நில அபகரிப்பு புகார் எழுந்துள்ளது.

தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக அலுவலகம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது, அப்பொழுது எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் முதல் செங்கல்ல எடுத்து வைத்து பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து கட்சி அலுவலக கட்டுமான பணிகள் வேக வேக நடந்தன.

இந்த சூழல்ல திமுக அலுவலகம் கட்ட எனக்கு சொந்தமான ஆயிரம் சதுர அடி நிலத்தை திமுக மாவட்ட செயலாளர் கல்யாண சுந்தரம் அக்கிரமிச்சுட்டார்னு திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த செல்வம் அப்டின்னு ஒருத்தர் போலீசில் புகார் குடுத்துருக்கார்.

இந்த விவகாரம் திமுக வட்டாரத்தில் மட்டுமில்லங்க அரசியல் விவகாரத்தையும் பரபரப்பாக இருக்கு, இது குறித்து புகார் கொடுத்த செல்வம் என்ன சொல்றாரு அப்படினா, 'திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த வலங்கைமான் தாங்க எனக்கு சொந்த ஊரு கும்பகோணம், ரயில் நிலையத்திற்கு சொந்தமா 6523 சதுர அடி இடம் இருக்கு. என் இடத்துக்கு வடக்கு பக்கத்துல திமுக அலுவலகத்தில் கட்டுகிறார்கள் அதற்கான ஏற்பாட்டா வடக்கு மாவட்ட செயலாளரும், மாநிலங்களவை எம்.பியுமான கல்யாணசுந்தரம் தலைமையில் திமுகவினர் வேகமா செஞ்சுட்டு வர்றாங்க.

அதற்கான பூமி பூஜையில் கூட உதயநிதி ஸ்டாலின் தான் வந்து முதல் செங்கல் எடுத்து வச்சு ஆரமிச்சு வச்சாரு. ஆனால் இப்ப என்ன பண்றாங்க திமுக கட்சி அலுவலகம் கட்டுற பேர்ல எம்பி கல்யாணசுந்தரத்தின் மகன் முத்துச்செல்வன் அனுமதி இல்லாமலே என் இடம் 1000 சதுர அடியை சேர்த்து சுற்றுச்சுவர் வச்சுக்கிட்டாங்க.

என்னுடைய இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட தொடர்பாக கல்யாணசுந்தரத்திடன் கேட்டதுக்கு 'உன்னால முடிஞ்சதை பார்த்துக்க' என்றார். இதனை அடுத்து நான் ஆன்லைன் மூலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன் ஆனால் காவல்துறையினர் விசாரணை எதுவும் செய்யவில்லை.

இதை அடுத்து கும்பகோணம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன் என் மனுவை விசாரித்த நீதிமன்றம் 2 தேதி வரை அந்த இடத்தில் யாரும் நுழையக்கூடாது அப்டின்னு உத்தரவு போட்டாங்க. ஆனா நீதிமன்ற உத்தரவை எல்லாம் மதிக்காம என் இடத்தையும் சேர்த்து திமுக அலுவலகம் கட்டுற வேலைய மறுபடியும் அரமிச்சுட்டாங்க, இதுக்காக நான் வச்சிருந்த சுவற்றையும் சேர்த்து இடிச்சு தள்ளிட்டாங்க!

இதை நான் அங்க போய் கேட்டா அங்க வேலை செய்றவங்க 'நீ வந்தா மாவட்ட செயலாளரு உன்னை அடித்து விரட்ட சொல்லி இருக்காரு' என்ன மிரட்டுறாங்க இது தொடர்பாக போலீஸ் ஸ்டேஷன் போனாலும் புகாரை கண்டுக்க மாட்டேங்குறாங்க திமுக அலுவலகம் கட்றதுக்கு என் இடத்தை மட்டும் இல்லைங்க பக்கத்துல இருக்க அரசு இடத்தையும் ஆக்கிரமிப்பு செஞ்சிருக்காங்க முதல்ல ஸ்டாலின் தலையிட்டு ஏதாவது செஞ்சு என் இடத்தை மீட்டு தரணும் ன்னு அழுவாத குறையா சொல்றாருங்க!

இப்படி திமுக அலுவலகம் கட்டுவதற்கு இடத்தை ஆக்கிரமிச்சது மட்டும் இல்லாம அதுக்கு உதயநிதி கூப்பிட்டு செங்கல் எடுத்து வச்சு பூமி பூஜை போட்டது சலசலப்பை ஏற்படுத்தியிருக்குங்க. உதயநிதி செங்கல் எடுத்து வச்சாலே விவகாரமா இருக்குங்க!


Source - Junior Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News