ஐயோ பாவம்! காசு கொடுத்து ஆட்களை கூட்டி வந்து ஸ்டாலினை மனம் குளிர வைக்கும் கும்பல்!
ஐயோ பாவம்! காசு கொடுத்து ஆட்களை கூட்டி வந்து ஸ்டாலினை மனம் குளிர வைக்கும் கும்பல்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில், தி.மு.க-வினர் நடத்திய போராட்டத்தில் பங்கேற்பதற்காக, பொது இடத்தில் பொதுமக்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கொரோனா விதிமுறைகள் காற்றில் பறக்க விடப்பட்டு மக்களை ஆட்டு மந்தையில் அடிப்பதைப்போல கீழ்த்தரமாக நடத்தினர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே திமுகவினர் மீது மேலும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த மம்சாபுரம் பேரூராட்சியில் தி.மு.க நிர்வாகியான தங்கமாங்கனி, அவரது ஆதரவாளர் பல்க்ராஜா ஆகியோர், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டத்துக்கு ஏற்பாடு செய்தனர். இதனால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
எவ்வளவு முயன்றும் திமுக நடத்தும் கூட்டங்களுக்கு மக்கள் தன்னார்வமாக வந்து கலந்து கொள்வதில்லை. கூட்டத்தில் பங்கேற்க யாரும் வராததால், தி.மு.க. நிர்வாகிகள் மக்களுக்கு பணத்தை கொடுத்து அழைத்து வந்தனர்.
மேலும், இந்த போராட்டத்தின்போது, கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்ட நிகழ்வு அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.