'செருப்பை தூக்கி தலையில் வைத்துக்கொண்டு இருந்த சமுதாயம்' - சர்ச்சையை ஏற்படுத்திய லியோனியின் மேடைப்பேச்சு
'செருப்பைத் தலையில் தூக்கிக்கொண்டு இருந்த சமுதாயத்தை மேயர் ஆக்கியவர் முதல்வர் ஸ்டாலின்' என லியோனி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

By : Mohan Raj
'செருப்பைத் தூக்கி தலையில் வைத்துக்கொண்டு இருந்த சமுதாயத்தை மேயர் ஆக்கியவர் முதல்வர் ஸ்டாலின்' என லியோனி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தி.மு.க அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது.
இதில் தலைமை கழக கொள்கை பரப்புச் செயலாளர், தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி கலந்து கொண்டு பேசுகையில், 'செருப்பை தலையில் தூக்கிக்கொண்டு இருந்து சமுதாயத்தை மேயராக்கியவர், அவர்களை மாண்புமிகு மேயர் என அழைக்க வைத்து திராவிடப் புரட்சி செய்த தலைவர் தமிழக முதல்வர் ஸ்டாலின்' என பேசினார்.
முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து பேசுகிறேன் என குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் 'செருப்பை தூக்கி தலையில் வைத்துக் கொண்டு இருந்த சமுதாயம்' என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சாதியை மையமாக வைத்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவாக பேசுவது சட்டப்படி தவறு என்பது தெரிந்தும் பாடநூல் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி இவ்வாறு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முதல்வரை புகழ்கிறோம் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவு செய்வது எந்த வகையில் நியாயமாக இருக்க முடியும் எனவும் பல தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
