Kathir News
Begin typing your search above and press return to search.

சிகிச்சைக்கு செல்லும் சோனியா - யாருய்யா தலைவரு எங்களுக்கு என திண்டாடும் காங்கிரசார்

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த கோரி காங்கிரசார் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

சிகிச்சைக்கு செல்லும் சோனியா - யாருய்யா தலைவரு எங்களுக்கு என திண்டாடும் காங்கிரசார்
X

Mohan RajBy : Mohan Raj

  |  25 Aug 2022 7:02 PM IST

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த கோரி காங்கிரசார் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்த நிலையில் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார்.

இதனால் இடைக்கால தலைவராக சோனியா பொறுப்பேற்றார், ஆனால் அவரால் உடல் நலக் குறைவு காரணமாக கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட முடியவில்லை.


இந்த சூழலில் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா உள்ளிட்ட 23 காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்து புத்துணர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என கடிதம் எழுதினார்கள் இந்த சூழலில் ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் செப்டம்பர் 21ஆம் தேதிக்குள் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்தலை நடத்த ஏற்பாடு செய்யப்படும் என முடிவு செய்யப்பட்டது.


இது ஒரு புறம் இருக்க மறுபுறம் ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக நியமிக்க வேண்டும் என ஒரு தரப்பினர் முயற்சி செய்து வருகின்றனர் ஆனால் ராகுல் காந்தியோ முடியாது என பிடிவாதமாக இருக்கிறார்.


இதனால் வருகின்ற 28ஆம் தேதி சோனியா காந்தி காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார், காங்கிரஸ் தலைவர் பதவி தொடர்பாக 28ஆம் தேதி முடிவு செய்யப்படும் என தெரிகிறது சோனியா காந்தி சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதால் ஒரு தற்காலிகமான தலைவரை எதிர்நோக்கி காங்கிரஸ் கட்சி தற்போது காத்துள்ளது.

சோனியா ராகுலைத் தொடர்ந்து அடுத்த குடும்பத்தில் உள்ள பிரியங்காவை தலைமை பொறுப்புக்கு கொண்டு வரலாம் என ஒரு சில தீவிரமாக உள்ளனர், ஆனால் பிரியங்காவை தலைவராக்க ராகுல் விரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் யார் தலைவர் என்று தெரியாத திக்கற்ற நிலையில் காங்கிரஸார் பரிதாபமாக உள்ளனர்.


Source - Maalai Malar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News