Kathir News
Begin typing your search above and press return to search.

விரைவில் ராம ராஜ்ஜியத்தை நோக்கி தமிழகம் செல்லும்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ உறுதி!

விரைவில் ராம ராஜ்ஜியத்தை நோக்கி தமிழகம் செல்லும்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ உறுதி!
X

ThangaveluBy : Thangavelu

  |  4 April 2022 6:49 AM GMT

விரைவில் தமிழகம் ராமராஜ்ஜியத்தை நோக்கி செல்லும். முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் அதிமுக விரைவில் ராம ராஜ்ஜியத்தை அளிக்கும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, சொத்துவரியை உயர்த்தி வாக்களித்த மக்கள் அனைவருக்கும் திமுக அரசு துரோகத்தை இழைத்துள்ளது. இது போன்ற துரோகத்தை யாரும் செய்ய முடியாது. கடந்த காலத்தில் நாங்கள் கொண்டுவந்த திட்டங்கள் அனைத்தையும் புறக்கணித்துள்ளனர். தற்போது திமுக ஆட்சியில் விலைவாசி விஷத்தை போன்று உயர்ந்து விட்டது.

திமுக ஆட்சி அமைந்த பின்னர் மக்களுக்கு விரோதமான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 11 மாதங்களாக மிகவும் மோசமான சூழ்நிலையே தமிழகத்தில் நிலவி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Source: Puthiyathalaimurai

Image Courtesy: Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News